மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸில் இறுதி முடிவு!

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸில் இறுதி முடிவு!

சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை படம் பெரிய ஹிட். அடுத்து வெளியான ஹீரோ சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அடுத்தடுத்து வெளியாவதற்கு இரண்டு படங்கள் தயாராகி வருகிறது.

‘இன்றுநேற்றுநாளை’ தந்த ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான். ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் மற்றும் யோகி பாபு நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் தயாராகிவருகிறது. படப்பிடிப்பு முடிந்து, இறுதித் தயாரிப்புப் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. ஏலியன் கதை என்பதால் படத்தில் எக்கச்சக்க கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறது. அதனால், படம் வெளியாவதில் கொஞ்சம் தாமதமாகிறது. எப்படியும், இந்த வருட டிசம்பரில் ரசிகனை சந்திக்க இருக்கிறான் ‘அயலான்’.

ரெமோ பட தயாரிப்பு நிறுவனமான 24AM புரொடக்‌ஷன் தான் ஆரம்பத்தில் அயலான் படத்தை தயாரிக்க துவங்கியது. ஆனால், பொருளாதாரச் சிக்கலின் காரணமாக கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் இந்தப் படத்தின் தயாரிப்பைக் கைபற்றியது. அயலான் படத்தைத் தொடர்ந்து தயாரான மற்றுமொரு படம் டாக்டர்.

விஜய் நடிக்க உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சனின் படம். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்துவருகிறார். அனிருத் இசையில் படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படம் மார்ச் 26ஆம் தேதியே வெளியாக வேண்டியது. தேர்தலால் தள்ளிப் போனது. பிறகு, ரம்ஜானை டார்கெட் செய்தது. அப்போது, கொரோனா இரண்டாம் அலை காரணமாக வெளியாக முடியாமல் போனது.

திரையரங்குகள் திறக்கப்படாத சூழல் நிலவிவருவதால் டாக்டரை ஓடிடி ரிலீஸூக்குத் திட்டமிட்டார் தயாரிப்பாளர். அதற்காக, டிஸ்னி ஹாட் ஸ்டாரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. டிஜிட்டல் உரிமை மட்டுமின்றி விஜய் டிவிக்கு ஓளிபரப்பு உரிமையையும் கேட்டது ஹாட்ஸ்டார். ஆனால், ஏற்கெனவே, டாக்டர் படத்தின் ஒளிபரப்பு உரிமை சன் டிவியிடம் ஒப்பந்தம் செய்திருப்பதால் சிக்கல் நிலவிவந்தது.

இறுதியாக, திரையரங்குகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கொஞ்சம் காத்திருந்து திரையரங்கில் வெளியிட்டுவிடலாம் என்ற இறுதி முடிவுக்கு வந்துவிட்டார்கள் தயாரிப்புத் தரப்பினர். அதன்படி, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு டாக்டர் வெளியாக திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

- தீரன்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

ஞாயிறு 27 ஜுன் 2021