மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

பொன்னியின் செல்வன் தாமதமாவதால் நடிகர்களின் மாற்றுத் திட்டம்!

பொன்னியின் செல்வன் தாமதமாவதால் நடிகர்களின் மாற்றுத் திட்டம்!

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் கனவுத் திரைப்படம்.

இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தை லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க , ரவிவர்மா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

படத்துக்கான 75% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு ஷெட்யூல்கள் திட்டமிட்டபடி நடந்தால் படப்பிடிப்பு முடிந்துவிடும். ஆனால், படமாக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகள் வெளிப்புறத்தில் எடுக்க வேண்டியதாம். உள் அரங்க ஷூட் என்றால் கூட எளிதாக எடுத்துவிடலாம். ஆனால், வெளியில் படமாக்க வேண்டுமென்றால் அதிக கலைஞர்கள் பணியாற்ற வேண்டியிருக்கும். இந்த கொரோனா சூழலில் சாத்தியமில்லை.

ரஜினியின் அண்ணாத்த, விஜய் நடிக்கும் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சூர்யா 40 என அனைத்து பெரிய பட்ஜெட் படங்களும் ஜூலையில் துவங்குகிறது. ஆனால், பொன்னியின் செல்வன் ஷூட்டிங் மட்டும் தாமதமாகும் என்கிறார்கள் .

இதனால், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மாற்று திட்டத்தில் இருக்கிறார்கள். அதாவது, மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் `சர்தார்` படத்தின் படப்பிடிப்பில் ஜூலையில் கலந்துகொள்கிறார் கார்த்தி. அதுபோல, பூலோகம் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜெயம்ரவி நடிக்கச் செல்கிறார். விக்ரமும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் `கோப்ரா` படத்தையும் முடித்துக் கொடுக்க இருக்கிறார்.

அதுவரை பொன்னியின் செல்வன் நிறுத்தமா ? என்று கேட்டால், படப்பிடிப்பு மட்டும் தான் தாமதமாகிறது. அதற்குப் பதிலாக, படத்தின் கிராக்பிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறாராம் மணிரத்னம்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 27 ஜுன் 2021