மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

ஷாரூக் படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?: அட்லீ தரும் சர்ப்ரைஸ்!

ஷாரூக் படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?: அட்லீ தரும் சர்ப்ரைஸ்!

கமர்ஷியலாக எக்கச்சக்கப் படங்கள் தமிழ் சினிமாவில் வருகின்றன. ஆனால், வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர்கள் மிகக் குறைவே. அப்படி, கமர்ஷியல் சினிமாக்களில் சிக்ஸர் விலாசும் இயக்குநர்களில் ஒருவர் அட்லீ.

தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகரான விஜய்யை மூன்று முறை இயக்கியவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானை இயக்க தயாராகி வருகிறார். ஷாரூக்கின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்க இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்துக்கான பணிகள் கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. தற்போது படமானது படப்பிடிப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

படத்தில் ஷாரூக் ஜோடியாக நடிக்கப்போவது யாரென்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. மிகப்பெரிய சர்ப்ரைஸாக ஷாரூக் ஜோடியாக நடிக்கவைக்க நயன்தாராவிடம் அட்லீ தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாக ஒரு தகவல். பொதுவாக, பாலிவுட் நடிகைகளை தமிழ்ப் படங்களில் இறக்குமதி செய்வதையே பெருமையாகக் கருதி வருகின்றனர். இந்த நிலையில், தமிழிலிருந்து ஒரு நடிகை இந்திக்குச் செல்கிறார்.

ஷாரூக்கின் அனுமதி இல்லாமல் நயன்தாராவிடம் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருக்காது. தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நயனுக்கு அடுத்த கட்டமாக இருக்கும் பாலிவுட் சினிமாவுக்குச் செல்வது என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லீ இயக்குநராக அறிமுகமான ராஜா ராணி படத்தில் நடித்தார் நயன்தாரா. சொல்லப் போனால், நயன்தாராவின் கம்பேக் சினிமா ராஜா ராணி தான். அதன் பிறகு, அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் பிகில் படத்தில் இணைந்து நடித்தார்.

இந்த நிலையில், ஷாரூக் படத்தில் நடிப்பாரா நயன்தாரா எனும் கேள்வியுடன் ’நயன்தாரா’ எனும் பெயரானது ட்விட்டரில் ட்ரெண்டாகியும் வருகிறது.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 27 ஜுன் 2021