மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

ஊரடங்கு ஒரு வட்டம்டா: அப்டேட் குமாரு

ஊரடங்கு ஒரு வட்டம்டா: அப்டேட் குமாரு

வாழ்க்கை ஒரு வட்டம்டானு மெட்ராஸ்லேர்ந்து போன் பண்ணான் ஃப்ரெண்ட் ஒருத்தன். என்னடா விஷயம் விஜய் பஞ்ச் டயலாக்லாம் விடுறேனு ஊர்லேர்ந்து கேட்டேன். போன வருச கொரோனா சீசன்ல, ‘மெட்ராஸ்லேர்ந்து யாரும் வந்தா உடனே பஞ்சாயத்துக்கு தெரியப்படுத்துங்க’னு தண்டோராவெல்லாம் போட்டீங்க. ஆனா இந்த கொரோனா சீசன்ல சென்னைதாண்டா முதல்ல தப்பிச்சிருக்கு. இப்ப உங்க ஊருக்கு பஸ் இல்ல பாத்தியானு கேக்குறான். போற போக்கைப் பார்த்தா இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துற அளவுக்கு கொண்டு போய் விட்ருவாங்க போலிருக்கே... ஊரடங்கு ஒரு வட்டம்டா.

நீங்க அப்டேட் பாருங்கங்க....

செங்காந்தள்

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை₹ 100 ஐ தாண்டியது.

மற்ற மாவட்டங்களுக்கு பெட்ரோல் தளர்வு கொடுத்துள்ளது.

மயக்குநன்

ஒரு மாதத்தில் ஏடிஎம் அல்லது வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், கட்டணமாக ரூ.15+ ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்!- எஸ்பிஐ.

வங்கியைக் கொள்ளை அடிக்கிறதைக் கேள்விப் பட்டிருக்கோம்... வங்கியே கொள்ளை அடிக்கிறதை இப்பத்தான் கேள்விப்பபடறோம்..!

செங்காந்தள்

நாணயங்கள் சேர்ந்ததுதான் ரூபாய்.

ரூபாயிலிருந்து பிரிந்தது அல்ல நாணயங்கள் ...!!!

Mannar & company

நூறை தொடப்போகுது மாமா..

பெட்ரோல் விலையா மாப்ள.

சசிகலா அவங்க வெளியிட்ட ஆடியோக்களின் எண்ணிக்கை மாமா!

சரவணன். ℳ

வங்கியிலோ அல்லது ஏடிஎம்மிலோ மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் - எஸ்பிஐ .

நாலு முறையா.. சோதிக்காதீங்கடா என்னை, ஒரு தடவை எடுக்கறதுக்கே பணமில்லாமல் இருக்கேன்...

ரஹீம் கஸ்ஸாலி

ம நீ ம கட்சியின் தலைவர் பொறுப்புடன் கூடுதலாக பொதுச்செயலாளர் பொறுப்பையும் ஏற்பதாக கமல்ஹாசன் அறிவிப்பு

ஹீரோவும் நானே... இயக்குநரும் நானே..!

balebalu

1 மாதத்தில் 4 முறைக்கு மேல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் கட்டணமாக வசூலிக்கப்படும் ~ எஸ்.பி.ஐ

இதெல்லாம் நல்லா சொல்லுங்க கடைசில கொள்ளையர்கள் கிட்ட கோட்டை விட்டுடுங்க

PrabuG

போற போக்க பாத்தா OTTல ரிலீஸ் பண்ணுவாங்க போலருக்கு.

என்ன படம்.

படமா.. சின்னம்மா ஆடியோங்க!!

ச ப் பா ணி

நிமிர்ந்த நடையும்

நேர்கொண்ட பார்வையும்..

"நெட் கார்டு தீர்ந்து போனபிறகு"!

amudu

வருவாய் குறைவான மாதங்களில் தான், செலவு அதிகரிக்கும் என்பதும் ஒரு வகையான நியூட்டன் விதியே.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஆல்பா, பீட்டா, டெல்டா, காமா - இதெல்லாம் ஸ்கூல் படிக்கும் போதே புரிஞ்சுக்க முடியாம உயிரை வாங்குச்சு, இப்போ கொரோனா வைரஸா வந்து திரும்பவும் உசுரை வாங்குதே..

மயக்குநன்

வாக்குறுதி கொடுத்த தி.மு.க, அதுபற்றி பேசாமல் இருப்பது ஏன்?- வானதி சீனிவாசன் கேள்வி.

தேரதல்ல ஜெயிச்சா... 'வலிமை அப்டேட்' வாங்கித் தர்றதா வாக்குறுதி கொடுத்த நீங்க அதைப் பத்தி பேசாம இருக்கிறது ஏன்..?!

முதியோன்

நேரம் ஒன்றுதான். ஆனால், அதன் மதிப்பு நபருக்கு நபர் மாறுபடுகிறது !

-லாக் ஆஃப்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

சனி 26 ஜுன் 2021