மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

வலிமை அப்டேட் தாமதமாகக் காரணம்!

வலிமை அப்டேட் தாமதமாகக் காரணம்!

விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர், பீஸ்ட் என கொண்டாட்டத்துக்கு மேல் கொண்டாட்டம். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அஜித் ரசிகர்களுக்கு `வலிமை` எனும் பெயரைத் தவிர எந்தக் கொண்டாட்டமும் இல்லை.

இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் `நேர்கொண்டப் பார்வை` படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படமாக உருவாகிவருகிறது `வலிமை`. ஒரு வருடத்துக்கு மேலாக படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இன்னும் முடிந்தபாடில்லை.

வலிமை படத்தில் நடிக்கும் நடிகர்களில் தொடங்கி தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவரிடமும் சோசியல் மீடியாவில் அப்டேட் கேட்டுவருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

சமீபத்தில் யுவன் ஷங்கர்ராஜா சோசியல் மீடியாவில் பேசும்போது, தாய்மையை மையமாகக் கொண்டு ஒரு பாட்டு படத்தில் இருக்கிறது என்றார். இப்படி, சின்ன சின்ன அப்டேட்டுகள் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. அதற்கு, காரணம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானப் பிறகுதான், முதல்பார்வை போஸ்டரை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் படக்குழு. குறிப்பாக, அஜித் போட்டிருக்கும் ஆர்டர் என்கிறார்கள். ஆனால், இதில் போனிகபூருக்கு பெரிதாக உடன்பாடில்லை. ஆக, திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பதே உறுதியாக தெரியாத சூழல் நிலவுவதால் எப்படி, பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது என்பதுதான் வலிமை அப்டேட் விடுவதில் இருக்கும் சிக்கல்.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக, ஓரிரு வாரத்தில் சென்னை வருகிறாராம் போனிகபூர். இயக்குநர் ஹெச்.வினோத் & அஜித் இருவரையும் சந்திக்க இருக்கிறார். அதனால், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் எப்போது என்பது குறித்த உறுதியான தகவல் கிடைத்துவிடும்.

இது ஒருபக்கம் இருக்க, படம் குறித்த இன்னொரு தகவலும் கிடைத்திருக்கிறது. படத்தில் மொத்தமாக ஐந்து ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதில் ஒரு ஆக்ஷன் சீன் ஒன்பது நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள்.

ஏற்கெனவே, நேர்கொண்டப் பார்வையில் ஹெச்.வினோத் வைத்திருந்த ஆக்ஷன் காட்சிகள் வரவேற்பைப் பெற்றது. பிங்க் படத்தில் சண்டைக் காட்சிகள் இருக்காது. தமிழில், ரசிகர்களுக்காக சண்டைக் காட்சி படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தில் உளவுத்துறை போலீஸாக வரும் அஜித்துக்கு இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், அப்டேட்டுக்கு மட்டும் கொஞ்சம் பொறுமைக் காக்க வேண்டும்.

- ஆதினி

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

சனி 26 ஜுன் 2021