மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

‘பிகில்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிம்பு

‘பிகில்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிம்பு

தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நடிகராக மாறிவருகிறார் சிம்பு. கடந்த பத்து வருடங்களில் நடிக்காமல் தவறவிட்ட படங்களுக்கெல்லாம் சேர்த்துவைத்து படங்கள் நடித்துவிடும் நடிப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். உடல் எடையையும் குறைத்து ஃபிட் சிம்புவாக மாறிவிட்டதால் தயாரிப்பாளர்களின் தேர்வாகவும் சிம்பு மாறியிருக்கிறாராம்.

தயாரிப்பாளரின் தேர்வாக சிம்பு மாறியிருக்கிறார் என்று கூறப்படுவதற்கு காரணம் இருக்கிறது. விஜய் நடிக்க பிகில் படத்தை தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட். தேர்ந்தெடுத்துப் படங்களை தயாரிக்கும் இந்நிறுவனமானது பெரிய பட்ஜெட் படங்களில் அதிகமாக கவனம் செலுத்திவருகிறது. ரஜினியின் அடுத்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூட தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிம்புவுக்கு அடுத்தப் படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறார் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. சிம்புவுக்காக தமிழில் பெரிய இயக்குநர்கள் சிலரிடம் கதைகளும் கேட்டுவருகிறதாம். ஸ்கிரிப்ட் உறுதியானதும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சிம்பு நடிப்பில் பெரும் பொருட்செலவில் ‘மாநாடு’ உருவாகி வருகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ்காமாட்சி தயாரிப்பில் படம் தயாராகி வருகிறது. யுவன் ஷங்கர்ராஜா இசையில் சமீபத்தில் படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி பெரியளவில் டிரெண்டாகி வருகிறது. மூன்று நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. எப்படியும் , ஜூலையில் படம் தயாராகிவிடும். இந்த வருடம் ஈஸ்வரனைத் தொடர்ந்து சிம்புவுக்கு அடுத்த ரிலீஸாக மாநாடு இருக்கும்.

மாநாடு முடித்த கையோடு, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார். கன்னடத்தில் வெளியான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துவருகிறார். ஏற்கெனவே, படத்துக்கான பாடல்கள் முடிந்துவிட்டதாகவும் தகவல்.

இப்படத்துக்குப் பிறகு, கெளதம் மேனன் இயக்கத்தில் ஐசரி தயாரிப்பில் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்தப் படங்களையெல்லாம் முடித்துவிட்டு, ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறாராம் சிம்பு.

- தீரன்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

வெள்ளி 25 ஜுன் 2021