மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

‘காத்துவாக்குல ரெண்டுகாதல்’ எப்போது ரிலீஸ்!

‘காத்துவாக்குல ரெண்டுகாதல்’ எப்போது ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி. மொத்தமாக, 15 படங்கள் தமிழில் மட்டும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். கமிட்டான படங்களே வெளியாகாத நிலையில், புதிதுபுதிதாக படங்களுக்கு ஒப்பந்தம் செய்துவருகிறார்.

விஜய்யுடன் மாஸ்டர், தெலுங்கில் உப்பென்னா, வெப் சீரிஸான குட்டி ஸ்டோரி படங்கள் இதுவரை விஜய்சேதுபதிக்கு வெளியாகிவிட்டது. அடுத்தடுத்து துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி படங்கள் இந்த வருட ரிலீஸாக எதிர்பார்க்கலாம். இந்த வரிசையில் மற்றுமொரு படமும் இணைகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்க உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. அனிருத் இசையில் முக்கோணக் காதலாக படம் உருவாகிவருகிறது. ரொமாண்டிக் காமெடிப் படமாக உருவாகிவரும் இதன் புது அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது. இந்தப் படத்துக்கான ஷூட்டிங் சென்ற வருடம் ஏப்ரலில் துவங்கியது. லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுவந்தது. அதோடு, விஜய்சேதுபதியின் அடுத்தடுத்த படங்களின் கமிட்மெட்டினால் கொஞ்சம் தள்ளிப் போனது. தற்பொழுது, படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இந்தப் படத்தை வருகிற அக்டோபர் மாதத்தில் திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடாபோடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்தக் கூட்டம் படத்தைத் தொடர்ந்து நான்காவது படமாக இது உருவாகிவருகிறது. இந்தப் படத்தை லலித்குமாருடன் இணைந்து விக்னேஷ் சிவன் தயாரித்துவருகிறார்.

விஜய்சேதுபதிக்கு ரிலீஸூக்கு ரெடியாக இருக்கும் துக்ளக் தர்பார் மற்றும் லாபம் படங்கள் இரண்டுமே ஓடிடி ரிலீஸூக்காக பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. அதோடு, கடைசி விவசாயி படத்தை சோனி லிவ் ஓடிடி கைப்பற்றியிருப்பதாகவும் ஒரு தகவல். அப்படியென்றால், திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்தப்பிறகு விஜய்சேதுபதிக்கு தியேட்டரில் வெளியாகும் படமாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் இருக்கும்.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 25 ஜுன் 2021