மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

அழைப்பிதழுடன் ஆதார் எண் கேட்கும் ஷங்கர் வீட்டு திருமணம்!

அழைப்பிதழுடன் ஆதார் எண் கேட்கும் ஷங்கர் வீட்டு திருமணம்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஐஸ்வர்யா மருத்துவராக இருக்கிறார். அவருக்குதான் திருமணம் நடக்கவிருக்கிறது. புதுச்சேரி மட்டைப்பந்து அணியின் தலைவரான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித். 29 வயதான ரோகித், தமிழ்நாடு அணிக்குள் விளையாட இடம் கிடைக்காததால் 2015 இல் இலங்கைக்குச் சென்று விளையாடினார். அதன்பிறகு தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்குத் தலைவராகவும் ஆனார் ரோகித்.

ஐஸ்வர்யா – ரோகித் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) அன்று சென்னையில் நடக்க இருக்கிறது. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்பார்கள். இந்திய சினிமா முழுவதும் அறிந்தவராக இருக்கும் அவரது வீட்டுத் திருமணமும் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும் என எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று

கொரோனா காலம் என்பதால் அரசு விதிமுறைகளின்படி குறைந்த எண்ணிக்கையிலேயே அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது

தற்போது அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவர்களுக்கு ஷங்கர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதில், உங்களுடைய ஆதார் அட்டையை அனுப்பிவையுங்கள். அதோடு தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றையும் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

எதற்கு? என்று அனைவரும் கேட்டுள்ளனர். கொரோனா ஊரடங்குக் காலம் என்பதால் திருமண நிகழ்வில் குறிப்பிட்ட அளவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு வழிகாட்டுமுறையில் கூறப்பட்டிருக்கிறது. அதனால், திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருடைய ஆதார் தகவல்களையும் வாங்கி, எவ்வளவு பேர் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்கிற விவரத்தோடு அரசு அனுமதி பெறுவதற்காகவே அனைவருடைய ஆதார் மற்றும் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களா? என்கிற விவரத்தையும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது. ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள இவ்வளவு நடைமுறைகளா? என்று அழைப்பிதழ் வழங்கப்பட்டவர்கள் ஆச்சரியமும், அயற்சியும் அடைந்துள்ளனர்

-இராமானுஜம்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வெள்ளி 25 ஜுன் 2021