மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களை ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இவற்றில், ‘ஆடுகளம்’ படம் ஆறு தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

இதேபோல், இயக்குநர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘உதயம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.’காக்கா முட்டை’ தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. ‘விசாரணை’ தேசிய விருது பெற்றதுடன் அகாடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.

இப்போது இந்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்.

இந்தப் படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள். பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இதில் பான்-இந்தியா ஸ்டார் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை, வெற்றிமாறன் உதவியாளர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார். எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இவர் இந்தப் படம் மூலம் ராகவா லாரன்ஸ் உடன் இணைகிறார்.

இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடைபெறும்.

சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களைக் கொடுத்துவரும் ராகவா லாரன்ஸ், எஸ்.கதிரேசன், வெற்றிமாறன், ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஆகிய இந்த நால்வர் கூட்டணியால் இந்த பிரமாண்டமான படம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 25 ஜுன் 2021