மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. பலத்த மழையால் முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்குச் சுருண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி தொடங்கியது. இடையில் வருண பகவானும் விளையாடியதால் ஆட்டத்தின் ஐந்தாவது நாளில்தான் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

முதல் இன்னிங்ஸில் 99.2 ஓவர்களில் 249 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை.

அடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. சுப்மான் கில் 8 ரன்னில் வெளியேறினார். ஐந்தாவது நாள் நிறைவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

மழை பாதிப்பு எதிரொலியாக இந்த டெஸ்டில் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த ஆறாவது நாளான நேற்று (ஜூன் 23) கடைசி நாள் போட்டி நடைபெற்றது. முதல் செஷனிலேயே இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி (13 ரன்கள்), புஜாரா (15 ரன்கள்) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ரகானேவும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சிறிது நம்பிக்கை அளித்த ரிஷப் பண்டும் 41 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

73 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி நியூசிலாந்து அணியைவிட 138 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸை டாம் லாத்தம் - டேவான் கவாய் ஜோடி தொடங்கி வைத்தது. இவர்கள் முறையே 9 மற்றும் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சன் (52 ரன்கள், 89 பந்துகள்) மற்றும் ராஸ் டெய்லர் (47 ரன்கள், 100 பந்துகள்) இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 45.5 ஓவர்கள் 140 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்று கதாயுதத்தைக் கைப்பற்றியது.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வியாழன் 24 ஜுன் 2021