wஊர் பேரை கெடுத்துப்புட்டாரே: அப்டேட் குமாரு

entertainment

பிசினஸ் பண்ற பக்கத்து வீட்டு அண்ணன் சொந்த வீடு கட்டியிருக்காரு, அவர்கிட்ட வீட்டுக்கு எவ்வளவு செலவாச்சுனு விசாரிச்சப்ப, பத்து வருசமா பிசினஸ் பண்றேன், அதனால கடன் வாங்காம வீடு கட்டி முடிச்சிட்டேனு பெருமூச்சு விட்டாரு. பாவம்ணே நம்ம முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரு, 35 வருசமா பிசினஸ் பண்றாராமாம்… ஆனா சொந்த ஊர்லயே இன்னும் சொந்த வீடு கட்டலியாமாம். அவர் மேல தப்பா, இல்ல பிசினஸ் மேல தப்பானு தெரியலையே…ரெய்டு பண்ணப்ப கூட பெரிசா தெரியலைங்க. இப்ப கரூர் பேரை கெடுத்துப்புட்டீங்களேனு ஒரே பேச்சா இருக்குதுங்க

நீங்க அப்டேட் பாருங்க

**எனக்கொரு டவுட்டு**

மக்களின் வலி உணர்ந்து கடந்த லாக்டவுன்ல் தாடி வளர்த்தேன்..

எதே..

லாக் டவுன் சமயத்துல கடை திறக்கல, அதான் தாடி வளர்த்தேன்னு சொல்ல வந்தேங்க..

**கோழியின் கிறுக்கல்!!**

ஆடா, கோழியா? என்றக் குழப்பதோடே விடிகிறது,

ஞாயிறு!

**சரவணன். ℳ**

பெண்கள் மட்டும் எப்படி எப்பவுமே சந்தோஷமா இருக்காங்கன்னு இப்ப தான் தெரிஞ்சுது…

பெண்களுக்கு தாடி இல்லை…!

**balebalu**

அந்த குடும்பத்தை ‘இடியாப்ப பரம்பரை’ ன்னு ஏன் சொல்லுறாங்க ?

சொத்து ‘சிக்கல்’ ல்ல மாட்டிகிட்டு கோர்ட் கேசு ன்னு அலையுறாங்க ! அதான்

**ரஹீம் கஸ்ஸாலி**

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் பாமக அளித்த புகார் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு .

இதுவும் பாமகவுக்கு கிடைத்த வெற்றின்னு சொல்வாங்களோ?!

**ச ப் பா ணி**

நீரடித்து நீர் விலகாது போலத்தான்..

பைக் ஹார்ன் அடித்து பைக் விலகாது

**PrabuG**

பையன் குடும்ப கஷ்டம் தெரியாம வளருறானேன்னு வருத்தமா இருந்துச்சு.

இப்போ மாறிட்டானா.

ஆமா. தாடி வளர்க்க ஆரம்பிச்சுட்டான்ல.

**balebalu**

நல்ல பழக்கங்கள் – விடா முயற்சி

கெட்ட பழக்கங்கள் – விடும் முயற்சி

**தர்மஅடி தர்மலிங்கம்**

எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது – ஒ.பன்னீர்செல்வம்.

ஆனால், ‘ஆறுமுகசாமி ஆணையத்தை’ சந்திக்க மட்டும் தயாராக இல்லை அப்படி தான!

**PrabuG**

மொபைல் ஹாட்ஸ்பாட் கடனாக ஆன் பண்ண சொல்பவர்கள் எல்லாம் சார் ‘டேட்டா’ பரம்பரை..

**மயக்குநன்**

நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடை செய்வதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம்!- பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் ரத்தோர்.

‘பெகாசஸ்’ செயலியை வெச்சு கண்டுபிடிச்சீங்களாக்கும்..?!

**SwaraVaithee**

பாத்தா தாடி மட்டுமே வளர்த்துட்டு இருக்க மாதிரி தான் இருக்கும்.

ஆனா பெட்ரோல் விலைய நூறு ரூவாய்க்கி மேல கொண்டு போற அளவுக்கு பெரிய வித்தைக்காரன்.

**கோழியின் கிறுக்கல்!!**

எவ்வளவு சீக்கிரம் Retire ஆகலாம் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் நீங்கள் பொருளாதார தன்னிறைவை அடைந்து இருப்பீர்கள்!

ஆனால் நம்மில் பலருக்கு அந்த எண்ணம் கடைசி வரை தோன்றாதவாறு பார்த்துக் கொள்ளும் வாழ்க்கை!!

**-லாக் ஆஃப்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *