மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

ஹாலிவுட் பர்னிச்சரை உடைக்கப் போகும் பாலிவுட் சினிமா !

ஹாலிவுட் பர்னிச்சரை உடைக்கப் போகும் பாலிவுட் சினிமா !

ஹாலிவுட்டின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் குவென்டின் டாரன்டினோ. இயக்குநராகி 29 வருடங்களாகியும், வெறும் 10 படங்களே கொடுத்திருக்கிறார். அந்தப் பத்துப் படத்தின் மூலம் உலகமெங்கும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் டாரன்டினோ. 1992ல் `ரிசர்வாயர் டாக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், பல்ப் ஃபிக்‌ஷன் படம் இவரை உலக சினிமா ரசிகர்கள் பக்கம் கொண்டுச் சென்றது. சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநரான இவரின் கடைசி ரிலீஸாக 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படம் வெளியானது.

முரண்பட்ட காட்சியமைப்பு, திரைக்கதையில் செய்யும் புதுமை, நான்லீனியரில் செய்யும் மேஜிக் ஆகியவையே மற்ற இயக்குநர்களிடமிருந்து குவெண்டினை மாறுபடுத்திக் காட்டும். அப்படியான இயக்குநரின் ஆகச்சிறந்தப் படைப்புகளில் ஒன்று கில்பில். இந்தப் படத்தின் முதல் பாகமானது 2003-ல் வெளியானது. லீட் ரோலில் உமா துர்மன் நடித்திருந்தார். இன்று வரையிலும் இந்தப் படத்துக்கு மாற்று என எந்த சினிமாவும் கிடையாது. தொடர்ந்து, இரண்டாவது பாகமானது 2004ல் வெளியானது. இரண்டுமே பெரிய ஹிட்.

இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இரண்டு வருடங்களுக்கு முன்பு, பாலிவுட் தயாரிப்பாளர் நிகில் திவேதி கைப்பற்றினார். இந்தப் படத்திற்கு பாலிவுட்டில் உயிர் கொடுப்பதற்கான பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளது.

பாலிவுட்டின் சைக்கோ இயக்குநர் என கொண்டாடப்படும் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். அதுபோல, உமார் துர்மன் நடித்த ரோலில் க்ரித்தி சனோன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த லாக்டவுன் நேரத்தில் அனுராக்கும் தயாரிப்பாளர் நிகிலும் இணைந்து படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டார்களாம். படத்துக்கான நடிக - நடிகையர்கள் கூட தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உலக ரசிகர்கள் கொண்டாடிய கல்ட் க்ளாசிக் படம் கில்பில். அதை ரீமேக் செய்ய என்ன அவசியம்? ஹாலிவுட்டிலிருந்து மீண்டும் ஒரு பர்னிச்சரை உடைக்கப் போகிறது பாலிவுட் சினிமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

- ஆதினி

.

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

வியாழன் 24 ஜுன் 2021