மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

சம்பளத்தை உயர்த்திய டாப்ஸி.. காரணம் இதுதான்!

சம்பளத்தை உயர்த்திய டாப்ஸி.. காரணம் இதுதான்!

இயக்குநர் வெற்றிமாறனின் சாய்ஸாக இருக்கும் நடிகர்களெல்லாம் உச்சம் தொடுகிறார்கள். ஏனெனில், ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான டாப்ஸி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

டாப்ஸி நடிப்பில் தமிழில் சமீபத்தில் கேம் ஓவர் படம் வெளியானது. த்ரில்லர் படமாக பெரிய ஹிட்.

தமிழைத் தாண்டி இந்தியில் அதிக படங்கள் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கடைசியாக டாப்ஸி நடித்து வெளியான ஐந்தாறு படங்கள் தொடர்ந்து ஹிட்டானது. பிங்க், மன்மர்ஸியா, பட்லா, தப்பாட் படங்களை உதாரணமாகக் கூறலாம்.

இதனால், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், கங்கனா வரிசையில் டாப்ஸியும் இடம் பிடித்துவிட்டார். இவர்கள், நாயகி முக்கியத்துவம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அசத்தியும் வருகிறார்கள்.

இதுவரை குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த டாப்ஸி, கங்கனா பெறும் சம்பளத்துக்கு இணையாக சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாராம். பொதுவாக, படத்துக்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர், புதிதாக கமிட்டாகும் படங்களுக்கு எட்டு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். டாப்ஸி கேட்கும் சம்பளத்தால் தயாரிப்பு தரப்புகள் கொஞ்சம் அதிர்ச்சி காட்டினாலும், டாப்ஸியின் மார்கெட்டுக்காக ஒப்புக் கொள்கிறார்களாம்.

அடுத்ததாக, டாப்ஸி நடிப்பில் ஆறு படங்களுக்கு மேல் தயாராகிவருகிறது. அதில், விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ஒரு படமும் அடக்கம். டாப்ஸிக்கு அடுத்த ரிலீஸாக ரேஷ்மி ராக்கெட் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு கதை தமிழ் இயக்குனர் நந்தா பெரியசாமி என்பது கூடுதல் தகவல்.

ஆதினி

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

புதன் 23 ஜுன் 2021