மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

விஜய், அஜித், விஷாலுடன் யோகிபாபு காட்டும் ஒற்றுமை!

விஜய், அஜித், விஷாலுடன் யோகிபாபு காட்டும் ஒற்றுமை!

நிற்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் காமெடி நடிகர் யோகிபாபு. ஹீரோவாக ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் காமெடியனாகவும் செம பிஸி.

இந்த வருடம் நாயகனாக நடித்து மண்டேலா வெளியானது. இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷூடன் கர்ணன் படத்தில் நடித்திருந்தார். காமெடியனாக இல்லாமல் ஒரு சீரியஸ் கேரக்டர். அதிலும் அசத்தியிருந்தார். தற்பொழுது யோகிபாபு கைவசம் 25 படங்கள் இருக்கிறது. இந்த லிஸ்டில் தினமும் ஒரு படம் இணைந்துக் கொண்டிருக்கிறது.

சொல்லப் போனால், சமீபமாக அதிகப் படங்களைக் கைவசம் வைத்திருக்கும் ஒரே நடிகர் யோகிபாபு தான். இதில், அஜித், விஜய் மற்றும் விஷாலுடன் யோகிபாபுக்கு ஒர் ஒற்றுமை இருக்கிறது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். படத்தின் அறிவிப்பு விஜய் பிறந்த தினத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு ஹீரோ உறுதியானதும் , யோகிபாபு நடிப்பதும் உறுதியானது. அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் `வலிமை`. ஹெச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரிப்பில் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்திலும் யோகிபாபு நடித்துவருகிறார்.

இந்த வரிசையில் விஷால் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் யோகிபாபு. து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் `விஷால் 31` படத்தில் காமெடியனாக நடிக்க உறுதியாகியிருக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. லாக்டவுனுக்குப் பிறகு, முதல்கட்டமாக விஷால் படத்தின் படப்பிடிப்புக்குச் செல்கிறார் யோகி. ஒரே ஷெட்யூலில் படம் உருவாக இருக்காம்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அஜித்துடன் வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களில் நடித்த யோகிபாபு, நான்காவது முறையாக வலிமை படத்தில் இணைந்து நடிக்கிறார். அதுபோல, மெர்சல், சர்க்கார் மற்றும் பிகில் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். ஆச்சரியமாக, பட்டத்துயானை, அயோக்யா மற்றும் ஆக்ஷன் படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் யோகிபாபு நான்காவது முறையாக இணைந்து நடிக்கிறார்.

- ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

புதன் 23 ஜுன் 2021