மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

தனுஷின் தெலுங்குப் பட அறிவிப்பின் பின்னணி!

தனுஷின் தெலுங்குப் பட அறிவிப்பின் பின்னணி!

இந்த வருடம் தனுஷிடமிருந்து இரண்டு படங்களும், இரண்டு அறிவிப்பும் வெளியாகியுள்ளன. திரைப்படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படமும் வெளியாகின. அதுபோல, இரண்டு புதுப்பட அறிவிப்புகளும் வெளியாகின. ஒன்று, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க இருக்கும் அறிவிப்பு. மற்றொன்று, சமீபத்தில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் அறிவிப்பு.

கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது. அதே மாதத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியே மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதை அறிவித்தார். ஆனால், 2022இல்தான் மாரி செல்வராஜ் படம் தொடங்க இருக்கிறது. அதற்கு பட அறிவிப்பை வெளியிடவும் ஒரு காரணமும் சொல்லப்பட்டது. அது என்னவென்றால், கர்ணன் வந்த நேரத்தில் பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் போட மாரி செல்வராஜை அணுகியிருக்கிறார்கள். ஆனால், மாரி செல்வராஜ் சம்மதமும் சொல்ல முடியாமல், வேண்டாம் என்றும் சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார். அந்தத் தயாரிப்பு தரப்பின் படத்தில் நடிக்க தனுஷ் விரும்பவில்லை. அதனால், மீண்டும் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி அறிவிப்பை முதலில் அறிவித்து, மாரி செல்வராஜுக்கு இருந்த மனசங்கடத்தைப் போக்கினார். அதற்காகவே, அந்த அறிவிப்பு அவசர அவசரமாக வெளியானது.

ஹாலிவுட் படமான ‘க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கும் தனுஷ், முதல்கட்டமாக கார்த்திக் நரேன் படத்தை முடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, எந்தப் படத்தைத் தொடங்குவார் என்பது உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

ஏனெனில், செல்வராகவன் இயக்க ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், இதற்கெல்லாம் முன்பாக ராட்சசன் இயக்குநர் ராம்குமார் படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். அதோடு, மாரி இயக்குநர் பாலாஜி மோகன், வெற்றி மாறன் ஆகிய இருக்குநர்களும் லைன் அப்பில் இருக்கிறார்கள்.

அப்படியிருக்கையில், திடீரென இன்னொரு அறிவிப்பும் தனுஷிடமிருந்து சமீபத்தில் வந்தது. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்துக்காக தனுஷுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. தனுஷ் வாங்கும் அதிக சம்பளமாக இந்தப் படம் அமைகிறது. இவ்வளவு தொகைக்குச் சம்பளம் பேசியதால்தான், உடனடியாக பட அறிவிப்பை வெளியிட்டார் தனுஷ்.

தற்போது, தெலுங்கு இயக்குநர் நடுவில் வந்திருப்பதால் லைப் அப்பில் இருக்கும் செல்வராகவன் உட்பட தமிழ் இயக்குநர்கள் படங்கள் தள்ளிப்போக வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். குறிப்பாக, தனுஷ் படத்துக்காக வருடம் மேலாகக் காத்திருக்கும் செல்வராகவன், ராம்குமார், பாலாஜி மோகன், மித்ரன் ஜவகர் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

- தீரன்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 23 ஜுன் 2021