மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

அணிலை அனுப்பியது யார்? அப்டேட் குமாரு

அணிலை அனுப்பியது யார்? அப்டேட் குமாரு

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் பூரா இன்னிக்கு அணில்தான் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டிருக்கு. மின்வெட்டுக்கு காரணம் அணில்தான்னு அமைச்சர் செந்தில்பாலாஜி போட்ட போடுல அணில்லா என்னானு தெரியாத குழந்தை கூட, திஸ் ஈஸ் அணில்னு சொல்லிப் பழகிடுச்சு. அது சரி... அதிமுக ஆட்சியில இருந்தவரைக்கும் இந்த அணிலெல்லாம் கரண்ட் கம்பிய தொட்டே பாக்கலையா... அப்படி இல்லைன்னா திமுக ஆட்சி வந்தபிறகு அணில் எல்லாத்தையும் கரண்டு கம்பிய நோக்கி அனுப்பிச்சது யாரு? ஸ்டாலின் நடத்தின கிராம சபை கூட்டத்துல வேலுமணி ஆள் அனுப்பிச்ச மாதிரி அதிமுகவினரே அனுப்பிட்டாங்களா...அணில்தான் இனிமே பதில் சொல்லணும்

நீங்க அப்டேட் பாருங்க

amudu

கட்சியினை மறுகட்டமைப்பு செய்ய நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை.

வெறும் மணலை வச்சு கட்டமைப்பு செஞ்சுறாதீங்க தலைவரே.

நாகராஜசோழன்.MA.MLA.

நீட் தேர்வில் விலக்கு பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இப்படித்தான் போன 5 வருசமும் அதிமுக அரசும் சொன்னாங்க...

தர்மஅடி தர்மலிங்கம்

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த சீனா; செய்தி!

அடாடா.. கொரோனாவை ரிலீஸ் செஞ்சு 'சோதனை'யும் பண்றாங்க தடுப்பூசி செலுத்தி செலுத்தி 'சாதனை'யும் பண்றாங்களா..?

ரஹீம் கஸ்ஸாலி

ஆளுநர் உரையில் திருப்தி இல்லை..! - எடப்பாடி

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை சொல்றாரு போல...!

நாகராஜசோழன்.MA.MLA

புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன!- பிரதமர் மோடி.

சின்ன திருத்தம்....

அடிக்கல் மட்டும் நாட்ட பட்டுள்ளதுண்ணு சொல்லுங்க...ஜி

ரமேஷ் ஏழுமலை

நடுத்தர குடும்பத் தலைவன் ரெண்டு வகை தான்.....,

1.வீட்டு கடன கட்ட உழைக்கறவன்...,

2.வீட்டு வாடகை கட்ட உழைக்கறவன்...!!!

கோழியின் கிறுக்கல்!!

ஒரு சிலரின் வாழ்வில் நாம் சோறு!

ஒரு சிலரின் வாழ்விலோ ஊறுகாய்!!

வேறு சிலரின் வாழ்விலோ நாம் வெறும் வாழை இலை!!!

தர்மஅடி தர்மலிங்கம்

‘‘பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியம் இல்லை” நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தேர்தலுக்கு முன்னையே 'சத்தியம்' வாங்கியிருந்தா இப்போ 'சாத்தியம்' இல்லைன்னு சொல்லுவீங்களா..??

மித்ரன்

ஆளுநர் உரை‌ ஏமாற்றம் அளிக்கிறது ~ எடப்பாடி பழனிச்சாமி

போற இடம்லாம் சசிகலாக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவாங்கன்னு எதிர்பார்க்க கூடாது..?!

மயக்குநன்

'இரட்டை வேடத்தில்' எம்ஜிஆர் நடித்தது போல, இரட்டை தலைமையின் கீழ் அதிமுகவும் வெற்றிகரமாகச் செயல்படும்!- செல்லூர் ராஜு.

நல்லாவே 'படம்' காட்டறீங்க அண்ணே..!

குருநாதா

அழுகாமல் பார்த்துக்குறவங்க பிரியமானவங்க மட்டும் இல்லை

பிரிட்ஜ்-ம் தான்...!!!

-லாக் ஆப்

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

செவ்வாய் 22 ஜுன் 2021