மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

மாஸ்டர் படத்தில் பணியாற்றிய இயக்குநரைத் தேர்ந்தெடுத்த சந்தானம்

மாஸ்டர் படத்தில் பணியாற்றிய இயக்குநரைத் தேர்ந்தெடுத்த சந்தானம்

ஒரு காலத்தில் நிற்க நேரமில்லாமல் நடித்துக்கொண்டிருந்தார் சந்தானம். காமெடியனாக நடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் என சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். திடீரென, அனைத்திற்கும் பிரேக் கொடுத்துவிட்டு ஹீரோவானார். இனி, நடித்தால் ஹீரோ மட்டும்தான் என்பதில் கறார் காட்டினார்.

காமெடியனாக வருடத்துக்கு எக்கச்சக்கப் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த காலம் போய், ஹீரோவாக இரண்டு படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறார். சென்ற வருடம் டகால்டி, பிஸ்கோத் படங்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த வருடம் பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியானது.

சந்தானத்தின் கைவசம் டிக்கிலோனா, சர்வர் சுந்தரம், சபாபதி, கொரோனா குமார் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. இதில் சில படங்கள் முடிந்துவிட்டன. சில படங்கள் படப்பிடிப்பு கட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில், புதிய படத்துக்கான இயக்குநரைத் தேர்வு செய்துவிட்டார் சந்தானம்.

மேயாத மான், ஆடை படங்களை இயக்கியவர் ரத்னக்குமார். விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தின் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து படத்தின் கதையை எழுதினார். இவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சந்தானம்.

சமீபத்தில் ரத்னக்குமாரைச் சந்தித்துக் கதை கேட்டிருக்கிறார் சந்தானம். இவர் சொன்ன ஸ்டோரி லைன் பிடித்துப் போனதால் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், தயாரிப்பு ஆகியவற்றை உறுதி செய்ததும் பட அறிவிப்பை வெளியிடவும் இருக்கிறார்களாம்.

சந்தானம் நடிப்பில் இந்த வருடம் டிக்கிலோனா, சர்வர் சுந்தரம் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 22 ஜுன் 2021