மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

‘கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்போம்!’

‘கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்போம்!’

கொரோனா கால பொது ஊரடங்கின் தளர்வுகளின் ஒரு பகுதியாக, நேற்று (ஜூன் 21) முதல் 100 நபர்களுக்கு மிகாமல் பணியமர்த்தி படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.முரளி என்கிற ராம நாராயணன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளை துவக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து திரை உலகைக் காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வரிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து மனு கொடுத்தோம்.

அதன் முதல்படியாக தமிழக முதல்வர் 100 நபர்களுக்குள் குழுவினரை வைத்து படப்பிடிப்பு துவக்கலாம். படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளையும் நடத்தலாம் என ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சானிடைசரை உபயோகப்படுத்தி, தடுப்பூசி போட்டுக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்திட வேண்டுமாய் தயாரிப்பாளர்களையும் படக்குழுவினரையும் கேட்டுக்கொள்கிறோம். மற்ற கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையோடு மீண்டும் படப்பிடிப்புகளை துவக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

செவ்வாய் 22 ஜுன் 2021