மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 ஜுன் 2021

தமிழ்நாட்டை மூணா பிரிச்சிட்டாங்களா? அப்டேட் குமாரு

தமிழ்நாட்டை மூணா பிரிச்சிட்டாங்களா? அப்டேட் குமாரு

ஏற்கனவே தமிழ்நாட்டை ரெண்டாப் பிரிக்கணும், மூணா பிரிக்கணும்னு அங்கங்க கோரிக்கையெல்லாம் கேக்குது. அதையெல்லாம் சத்தமில்லாம நிறைவேத்திட்டாரே ஸ்டாலின்னு காய்கறி கடையில வெண்டைக்காய ஒடிச்சுக்கிட்டே அண்ணன் ஒருத்தரு கேட்க நான் ஷாக்காயிட்டேன்... என்னண்ணே சொல்றீங்கனு கேட்க, ‘அட ஆமாப்பா ஊரடங்கு உத்தரவுல தமிழ்நாட்டை மூணா பிரிச்சு மூனு கேட்டகிரியில மாவட்டங்களை எல்லாம் வகைப்படுத்தியிருக்காங்களே’னு அவர் விளக்கம் கொடுத்த பிறகுதான் என் தக்காளி தப்பிச்சுது. அவரும் தப்பிச்சாரு

நீங்க அப்டேட் பாருங்க

amudu

செந்தமிழ் நாடெனும் போதினிலே மட்டுமல்ல, ஒரு வாரத்திற்கு எங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வாரேன் என்று மனைவி சொல்லும் போதினிலும், இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.

ரஹீம் கஸ்ஸாலி

கொரோனா பரவலை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி.

உங்க மாதிரி கடவுளுக்குத்தான் தெரியும்ன்னு கை விரிச்சவரு இல்லை.

பர்வீன் யூனுஸ்

திருமணத்திற்குப் பின் கணவனுக்கோ மனைவிக்கோ ஆரோக்கியம் இல்லை எனில் அது 'ILL' வாழ்க்கை ஆகி விடுகிறது.

நாகராஜசோழன்.MA.MLA

நீட் தேர்வில் விலக்கு பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இப்படித்தான் போன 5 வருசமும் அதிமுக அரசும் சொன்னாங்க...

balebalu

ரேஷன் கடை கியூ , பள்ளி அட்மிஷன் கியூ ,கோவில் தரிசன கியூ ..

மனித வாழ்வில் இப்போ புதிதாக தடுப்பூசி கியூ வும் சேர்ந்து கொண்டது

-CoronaVaccine

நாகராஜசோழன்.MA.MLA.

வற்றிப்போன குளங்கள் ஒரு போதும் கொக்குகளின் மேல் கோபம் கொள்வதில்லை.

Mannar & company

யோகா:

முதலில் மெதுவாக போர்வையை எடுக்கவும்.

கால்களை மெதுவாக உள்ளே இழுக்கவும்.

தலையோடு போர்த்தி கண்களை மூடவும்.

ஒரு தெய்வீகநிலையை அடைவீர்கள்!

நன்றி: வாட்ஸ்அப்

சப்பாணி

வேக்சின் போட்டு உடம்புவலி வந்தால் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டியது "இதற்குத்தானே ஊசிபோட்டாய் பாலகுமாரா"

பழைய சோறு

மாவு வியாபாரியின் மௌனத்தில் கிரைண்டர்கள் ஓடிக்கொண்டிருந்தன..!

Mannar & company

இரண்டு மனம் வேண்டும்

நினைத்து வாழ ஒன்று..

மறந்து வாழ ஒன்று..

மனைவியின் பிறந்தநாளையும்,

நம்முடைய திருமண நாளையும்!

mohanram.ko

'இருக்கிற இடம் தெரியாமல்' இருக்குது, கோவில் நிலங்கள்

கோழியின் கிறுக்கல்

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் போது பெண்களின் கூட்டமும்,

பணம் வழங்கும் போது ஆண்களின் கூட்டமும் அதிகமாக இருக்கின்றது!!

-லாக் ஆஃப்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 21 ஜுன் 2021