மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 ஜுன் 2021

விக்ரம் படத்தில் மாற்றம்... கோப்ராவை ஓரம் கட்டும் ‘சியான்60’

விக்ரம் படத்தில் மாற்றம்... கோப்ராவை ஓரம் கட்டும் ‘சியான்60’

டிமாண்டிகாலனி மற்றும் இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. விக்ரமுக்கு நாயகியாக கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். வெரைட்டியாக பல கெட்டப்புகளில் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு, கே.எஸ்.ரவிக்குமார், இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நினைத்த நாட்களை விட அதிகமாக நடந்து வருகிறது. சொல்லப் போனால், கொரோனா லாக்டவுன் காரணமாக 1 வருடத்துக்கு மேலாகப் படம் தாமதமாகிறது. அதோடு, இயக்குநரும் படப்பிடிப்பைத் தாமதப்படுத்துவதாகப் பல குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் பாக்கியிருக்கிறதாம். அதோடு, படப்பிடிப்பு முடிந்தாலும் பல கெட்டப்புகளில் விக்ரம் நடிப்பதால் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட சில பணிகளும் படத்தில் அதிகமாக இடம்பெறுகின்றன. அதனால், இந்தப் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்றே சொல்லப்படுகிறது.

கோப்ரா படத்தைத் தொடர்ந்து விக்ரமின் 60வது படமான ‘சியான் 60’ படத்தை துவங்கினார் விக்ரம். இந்தப் படத்தையும் லலித்குமார் தயாரித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் துருவ் விக்ரம் முக்கிய ரோலில் நடிக்கிறார். அதோடு, சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் வேகமாக நடந்துவருகிறது. இதுவரை, 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். ஜூலை மாதத்திலிருந்து சியான் 60 படப்பிடிப்பைத் துவங்கிவிடவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

இதன்படி, கோப்ரா படத்துக்கு முன்பாக சியான் 60 படம் வெளியாகிவிடும் என்கிறார்கள். சமீபத்தில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜெகமே தந்திரம்’ படம் மக்கள் மத்தியில் நெகட்டிவ் ரிசல்ட் பெற்றுவருவதால், ‘சியான் 60’ படத்தில் எந்த தவறும் நடந்துவிடக்கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார் விக்ரம்.

சியான் 60 தொடர்ந்து கோப்ரா படத்துக்கான மீதி வேலைகளையும் முடித்துக் கொடுக்க இருக்கிறார் விக்ரம். இவ்விரு படங்களையும் முடித்த கையோடு, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த மூன்று படங்கள் மட்டுமின்றி, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவநட்சத்திரம்’ படமும் விக்ரமுக்கு வெயிட்டிங்கில் இருக்கிறது.

- ஆதினி

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

திங்கள் 21 ஜுன் 2021