மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள்!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் (ஜூன் 18) இங்கிலாந்தில் தொடங்க இருந்தது. ஆனால், விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்ய, முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. முதல் நாள் ஆட்டம் நின்றுபோனாலும் ஐசிசி இந்த இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் நாள் வைத்திருப்பதால் நேற்று (ஜூன் 19) முதல் ஐந்து நாள் ஆட்டமாக இந்த டெஸ்ட் தொடங்கியது.

டாஸ் போடப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்க இருந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி வீரர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ரோகித் ஷர்மாவும், சுப்மன் கில்லும் நிதானமாக ஆடத் தொடங்கினர். 20.1 ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 62 ஆக இருந்தபோது ரோகித் ஷர்மா 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 24.3 ஓவர்களில் சுப்மன் கில்லும் 28 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியனுக்குத் திரும்பினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் நிதானமாக ஆடத் தொடங்கினர். 40.2 ஓவரில் புஜாராவும் ஆட்டமிழக்க, ரஹானே பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

பின்னர் 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 146 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்யா ரஹானே 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட், ஜேமிசன் மற்றும் வேக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இன்று (ஜூன் 20) மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 20 ஜுன் 2021