மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

சூப்பர் கேர்ள், ஃப்ளாஷ் உடன் 29 வருஷ பழைய பேட் மேன்!

சூப்பர் கேர்ள், ஃப்ளாஷ் உடன் 29 வருஷ பழைய பேட் மேன்!

நம்ம ஊரில் ரஜினி - கமல், விஜய்-அஜித் படங்கள் போல, ஹாலிவுட்டில் மார்வெல் - டிசி-க்குள் எப்போதுமே போட்டி இருக்கும். மார்வெல் கையில் டஜன் கணக்கில் படம் லைன் அப்பில் இருப்பது போல, டிசி-வசமும் எக்கச்சக்கப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு ரெடியாகி வருகிறது.

பேட் மேன், சூப்பர் மேன், வொண்டர் வுமன், ஆக்வா மேன், ஜோக்கர்,ஷஷாம் வரிசையில் டிசி நிறுவனத்தின் கதாபாத்திரங்களில் முக்கியமான மற்றுமொரு கேரக்டர் ஃப்ளாஷ். பேட்மேன் vs சூப்பர் மேன், சூசைட் ஸ்குவாட், ஜெஸ்டிஸ் லீக் படங்களில் ஃப்ளாஷ் கேரக்டர் வரும். மார்வெலில் ப்ளாக் விடோவுக்கு தனியாக படம் எடுப்பது போல, இந்த ஃப்ளாஷ் கேரக்டருக்கும் சோலோ படமொன்றை உருவாக்கிவருகிறது டிசி.

டிசியின் லைம் லைன்னை 2011ல் இருந்து ஃப்ளாஷ் பாய்ண்ட் ஆஃப் வியூவில் சொல்வது போல கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ‘தி ஃப்ளாஷ்’ என படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். வார்னர் ப்ரோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சொல்லப் போனால், இந்த ஃப்ளாஷ் படம் 2018லேயே உருவாகியிருக்க வேண்டியது. ஆனால், டிசியின் குழப்பமான டைம்லைன் காரணமாக தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

Ezra Miller லீட் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், பேட்மேன் கேரக்டருக்கும் இந்தப் படத்தில் வருகிறது. ஆனால், 1989ல் வெளியான பேட்மேன் படத்தில் ப்ரூஸ்வேன் கேரக்டரில் நடித்த Michael Keaton தான், இந்த படத்திலும் பேட்மேனாக வர இருக்கிறாராம். 1992ல் வெளியான பேட்மேன் ரிட்டன்ஸ் படத்துக்குப் பிறகு, பேட்மேன் கேரக்டரில் நடிப்பதை நிறுத்திவிட்ட இவர், 29 வருடத்துக்குப் பிறகு மீண்டும் பேட் மேனாக வர இருக்கிறார்.

இந்தப் படத்துக்கான செட் வேலைகள் முடிந்து, ஷூட் போக தயாராகி வருகிறது படக்குழு. இந்த ஃப்ளாஷ் கதாபாத்திரத்தோடு, சூப்பர் கேர்ள் கேரக்டரும் ஒரு முக்கிய ரோலாக படத்தில் இருக்கும்.

ஏற்கனவே, ஃப்ளாஷ்மற்றும் சூப்பர் கேர்ள் இருவருக்குமான க்ராஸ் ஓவர் காட்சிகள் ‘சூப்பர் கேர்ள்’ படத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், ‘தி ப்ளாஷ்’படத்திலும் சூப்பர் கேர்ள் எண்ட்ரி கொடுக்க இருப்பதை பட இயக்குநரும் உறுதி செய்திருக்கிறார்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 20 ஜுன் 2021