மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

பவர் கட்டா, பராமரிப்பா? அப்டேட் குமாரு

பவர் கட்டா, பராமரிப்பா? அப்டேட் குமாரு

இன்னிக்கு மட்டும் சென்னை அசோக் நகர்ல பத்து முறை மின்சாரம் கட் ஆயிருக்குனு அண்ணன் ஒருத்தரு ஃபேஸ்புக்ல செந்தில்பாலாஜி படத்தைப் போட்டு ஸ்டேட்டஸ் போட்டிருந்தாரு. அட, ரொம்ப தப்புண்ணே...கழக அகராதிப்படி பத்து முறை பராமரிப்புப் பணி நடைபெற்றுள்ளதுனு போடுங்கனு இன்னொரு அண்ணன் அதுல கமெண்ட் போட்டு கிண்டலடிச்சிருந்தாரு. பவர் கட்டா? பராமரிப்புப் பணியானு பட்டிமன்றம் போடலாம். அதுக்கு ஒரு ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து வச்சுக்கணும்

நீங்க அப்டேட் பாருங்க

ஜோக்கர்...

தனுஷ் ~ போதை பொருள் கடத்துற, ஆள கொல்றே, அப்ப நீ தீவிரவாதி தானே?!

சிவதாஸ் ~ யப்பா மக்களுக்காக போராடுற "போராளி" ன்னு சொல்லி வச்சிருக்கேன். அப்டியே சொல்லுப்பா..

எனக்கொரு டவுட்டு

மகளுக்கு பிடிக்குமென "முறுக்கு"

மருமகனுக்கு பிடிக்குமென "ஜிலேபி"

பேத்திக்கு பிடிக்குமென "லட்டு"

வீட்டாருக்கு பிடிக்குமென "பழங்கள்"

இவையெல்லாம் வாங்கிய பின் அவரிடம் மீதமிருந்தது அவரின் "பசி"

~அப்பா~

டேனியப்பா

-ஹேப்பி ஃபாதர்ஸ் டே.

-ஃபாதரை டேய்னு சொல்லக் கூடாதுடா மகனே.!

சரவணன். ℳ

சீனாவில் 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டடத்தை கட்டி முடித்து சாதனை!

பேசறியா.. மதுரை எய்ம்ஸ் கிட்ட பேசறியா..?

மயக்குநன்

சோனியா, ராகுலுடனான சந்திப்பை நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

'நெஞ்சுக்கு நீதி' மாதிரி, இது 'நெஞ்சுக்கு நிம்மதி'யா தலைவரே..?!

amudu

" ஐ.. அப்பா வந்துட்டார்" என்றார்களா, "அய்யோ.. அப்பா வந்துட்டார்" என்றார்களா, என்பது சொல்லிவிடும் குழந்தைகளுடனான நம் நெருக்கத்தை.

mohanram.ko

தற்கால 'குடி'யிருப்பு பகுதி- டாஸ்மாக்

'வி'சித்திரன்

" என்கிட்ட சொல்லிருந்தா நான் செய்திருப்பேனே " என்பவர்தான் நம் சொல்ல வந்ததைக் காது கொடுத்து கேட்காமல் இருந்தவர்.

சரவணன். ℳ

பொய் உரைகல் ~

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது சுவிஸ் பேங்க்ல பணம் போட்டா அது கருப்புப் பணம்..

இதுவே பாஜக ஆட்சில அப்படி பணத்தை போட்டு வச்சிருந்தா அது சேவிங்ஸ்டா...

நாகராஜசோழன்.MA.MLA.

பெட்ரோல் டீசல் விலை ஏறிபோச்சுண்ணு பேசிட்டு இருக்கற கேப் ல

சிமெண்ட் விலை கேட்டு அப்படியே நான் ஷாக் ஆகீட்டேன் டா...

ச ப் பா ணி

இன்னும் ஒருவாரம் ஊரடங்கு நீடிப்பு..அப்புறம்?

அப்பிடியே அடுத்த அடுத்த லாக்டெளன் பழகிடும்.

-கொரொனா நாமம் வாழ்க...

மயக்குநன்

கொரோனா வைரஸ் இன்னும் இருக்கிறது; அது தன்னை உருமாற்றிக் கொண்டு மீண்டும் வரலாம்! பிரதமர் மோடி.

மொத்தத்தில்... அதுவும் அரசியல்வாதிகள் மாதிரி ஆயிடுச்சு போல..?!

கோழியின் கிறுக்கல்!!

நல்ல கையெழுத்திற்கு பழகிய பேனாவும் ஓர் முக்கியக் காரணம்!!

- லாக் ஆஃப்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 20 ஜுன் 2021