மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

ரஜினிக்காக அமெரிக்காவில் காத்திருக்காத தனுஷ்

ரஜினிக்காக அமெரிக்காவில் காத்திருக்காத தனுஷ்

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதற்காக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசும் அனுமதி கொடுத்ததன் பெயரில் தனி விமானத்தில் அமெரிக்கா கிளம்பிவிட்டார் ரஜினி.

சமீபத்தில் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்தார் ரஜினி. கொரோனா அச்சுறுத்தலால் மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டியது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. தற்பொழுது, கொரோனா தாக்கம் குறைந்திருக்கும் நிலையில், அமெரிக்கா கிளம்பிவிட்டார் ரஜினி. இவருடன் மனைவி லதா மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்களும் சென்றிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ஹாலிவுட் திரைப்படமான ‘க்ரே மேன்’ படத்துக்காக அமெரிக்காவுக்கு மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் பிப்ரவரி மாதம் சென்றார் தனுஷ். படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில், அமெரிக்காவில் குடும்பத்துடன் நாட்களை கழித்துவந்தார் தனுஷ். இந்நிலையில், மாமனார் ரஜினியின் மருத்துவ பரிசோதனைக்காக உடன் இருந்து கவனித்துக் கொள்ள அமெரிக்காவில் தனுஷ் குடும்பமும் காத்திருந்தது.

ரஜினியும் அமெரிக்காவில் குடும்பத்துடனான கெட் -டு-கெதருக்குத் திட்டமிட்டிருந்தார் என்கிறார்கள். ஆனால், சென்னை திரும்பிவிட்டார் தனுஷ் என்று ஒரு தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் அமெரிக்காவில் ரஜினியை வரவேற்க அங்கு இருக்கிறார்களாம். தனுஷ் மட்டும் சென்னைவந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனைக்காக இரண்டுவாரங்கள் இருந்துவிட்டு, அனைவரும் தனி விமானத்தில் சென்னை திரும்ப இருக்கிறார்களாம்.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 20 ஜுன் 2021