^சோனி லிவ்: முதல் ரிலீஸ் இந்தப் படமா?

entertainment

பாலிவுட் ரசிகர்களின் மத்தியில் சோனி லிவ் ஓடிடி தளமானது மிகவும் பிரபலமான டிஜிட்டல் தளமாக இயங்கிவருகிறது. ஆனால், தென்னிந்திய ரசிகர்களை பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ் கவர்ந்த அளவுக்கு சோனி லிவ் கவரவில்லை. அந்தக் குறையைப் போக்க மின்னல் வேகத்தில் தமிழில் களமிறங்கியுள்ளது சோனி லிவ்.

தமிழில் எக்கச்சக்க புதுப்படங்களை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது சோனி லிவ். அதன்படி, தமிழில் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் ‘ராக்கி’, நயன்தாரா நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘வாழ்’, சிம்புதேவன் இயக்கியிருக்கும் ஆறு கதைகள் கொண்ட ‘கசட தபற’, விஜய்சேதுபதி நடித்திருக்கும் ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட சில முக்கியமான படங்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியுள்ளது சோனி லிவ். அதோடு, விஜய்சேதியின் ‘லாபம்’, அருண்விஜய் நடிக்கும் ‘பார்டர்’ மற்றும் அதர்வா நடித்திருக்கும் ‘தள்ளிப் போகாதே’ படங்களும் ஓடிடி ரிலீஸ் குறித்த பேச்சுவார்த்தையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப் படங்கள் மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆக முடியாமல் கிடப்பில் கிடக்கும் படங்களையும் குறைந்த விலைக்கு அடித்துப் பேசிக் கைப்பற்றியும் வருகிறது. அதோடு, ஏற்கெனவே வெளியாகி நல்ல பாராட்டுகளைப் பெற்ற படங்களையும் விலைக்கு வாங்கிவருகிறது. அப்படி, ராஜூமுருகன் கதையில் உருவான மெஹந்தி சர்க்கஸ் உரிமையையும் கைப்பற்றியது.

அதோடு, 3 வருடமாக ரிலீஸாக முடியாமல் தவித்துவரும் அரவிந்த்சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் நரகாசூரன் படமும் சோனி லிவ் நிறுவனம் வசம் சென்றிருக்கிறது. தேவையான அளவுக்கு படங்களை சேகரித்து விட்டதால், இந்த மாத இறுதியில் தமிழில் தடம் பதிக்கிறது சோனி லிவ். இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக முதலில் ‘தேன்’படம் தமிழில் வெளியாகிறது.

கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார், அபர்ணதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தேன். சர்வதேச விருதுகளை குவித்த இந்தப் படமானது, வருகிற ஜூன் 25ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

மாதத்துக்கு ஒரு புதுப்படம் ப்ரீமியர் செய்யும் திட்டத்திலும் இருக்கிறதாம் சோனி லிவ். அதோடு, தமிழில் பெஸ்ட் வெப் சீரிஸ்களை தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்களாம்.

**- ஆதினி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *