மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

கடுப்பேற்றும் ஸ்பைடர் மேன்... கடுப்பில் ‘மேட்ரிக்ஸ் 4’

கடுப்பேற்றும் ஸ்பைடர் மேன்... கடுப்பில் ‘மேட்ரிக்ஸ் 4’

உலகமெங்கும் ரசிகப் பட்டாளங்களைக் கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்களான ஸ்பைடர் மேன் மற்றும் மேட்ரிக்ஸ் படங்களின் அடுத்த பாகம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனி இப்படி செய்யலாமா?

அவெஞ்சர் படங்களின் மூலமாக உலக ரசிகர்களைத் தன்பால் ஈர்த்துவிட்டது மார்வெல் ஸ்டூடியோஸ். மார்வெலின் அவெஞ்சர் எண்ட் கேம் படத்துக்குப் பிறகு, எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் அனைத்து மார்வெல் படங்களுமே ஸ்பைடர் மேன் கேரக்டரை மையப்படுத்திதான் நகர இருக்கிறது. அதனால், ஸ்பைடர் மேன் கேரக்டரை கவனமாகக் கையாண்டு வருகிறது மார்வெல்.

மார்வெல் நிறுவனமானது தற்போது, பல படங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கிறது. ப்ளாக் விடோ, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2, தோர்: லவ் அண்ட் தண்டர், ப்ளாக் பாந்தர், II, கேப்டன் மார்வெல் 2, Shang-Chi and the Legend of the Ten Rings என வரிசையாக எக்கச்சக்கப் படங்களைத் தயாரித்துவருகிறது.

இந்தப் படத்துக்கு நடுவே, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறது. ஜான் வாட்ஸ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிவருகிறது. ஸ்பைடர் மேனாக டாம் ஹாலந்த் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ‘சினேசர்ஸ் 6’ தான் வில்லன்களாக வர இருக்கிறார்களாம்.

இந்த சினேசர்ஸ் டீமை லீட் செய்யும் மெயின் வில்லனாக நார்மென் ஆஸ்மன் கேரக்டர் இருக்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தை இந்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கிடையில், படத்தின் டிரெய்லர் கேட்டு மார்வெல் மற்றும் சோனி நிறுவனத்தை இணையத்தில் டேக் செய்து வந்தனர் ரசிகர்கள். இதனால், சோனி இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களைக் கடுப்பேற்றியிருக்கிறது. இதனால், கடுப்பான ரசிகர்கள் எங்களோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, டிரெய்லரை ரிலீஸ் பண்ணுங்க என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

செம கடுப்பில் மேட்ரிக்ஸ் 4 டீம்

1999இல் வெளியான மேட்ரிக்ஸ் படத்துக்கும், அதன் இரண்டாம் பாகத்துக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நான்காவது பாகத்தின் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது படக்குழு.

மேட்ரிக்ஸ் 4இல் லீட் ரோலில் ஜான் விக் நாயகன் Keanu Reeves நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பிராட் பிட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இருவரும் நடித்துவருகிறார்கள். கடந்த ஆண்டே படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. தற்போது, ஷூட்டிங்கை சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நடத்திவருகிறது படக்குழு.

இதற்கிடையில், படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் ஹாலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. மேட்ரிக்ஸ் 4ஆம் பாகத்துக்கு ‘The Matrix Resurrections’ என டைட்டில் வைத்திருக்கிறார்களாம். பெரும் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. ஆனாலும் படத்தின் புகைப்படங்கள் , ஷூட்டிங் வீடியோக்கள் ரசிகர்கள் மூலமாக இணையத்தில் வெளியாகி அவ்வப்போது வைரலாகும்.

இதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தும் பலனில்லை. அதனால், கடுப்பில் இருக்கும் படக்குழுவுக்கு, படத்தின் டைட்டில் லீக் ஆனதும் இன்னும் டென்ஷனாகிவிட்டதாம். எது எப்படியோ, மேட்ரிக்ஸ் 4 படமானது இந்த வருட டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் என்பது மட்டும் உறுதி.

- ஆதினி

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

வெள்ளி 18 ஜுன் 2021