மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இன்று ஆரம்பம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இன்று ஆரம்பம்!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இன்று (ஜூன் 18) இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான இடத்தில் விளையாடப் போகும் முதல் டெஸ்ட் இதுதான். மேலும் விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை.

இதேபோல் நியூசிலாந்து அணி கடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டிகளின் (50 ஓவர்) இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது. எனவே, இரு அணிகளும் ஐசிசி கதாயுதத்தைக் கையில் ஏந்தும் தருணத்துக்காகக் காத்திருப்பதால் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா , இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.

நியூசிலாந்து அணியில் சார்பில்... கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டிரெண்ட் போல்ட், டேவன் கான்வே, கிராண்ட்ஹோம், மேட் ஹென்ரி, ஜேமிசன், டாம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங், வில் யங் களமிறங்குகின்றனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணி, ஐசிசி கதாயுதத்துடன் ரூ.11.75 கோடி பரிசுத் தொகையை வெல்லும்.

-ராஜ்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

வெள்ளி 18 ஜுன் 2021