மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

தனுஷின் தெலுங்கு படம்!

தனுஷின் தெலுங்கு படம்!

ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் தனுஷ், நேற்று முன்தினம் தாயகம் திரும்பியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் அவர் ஏற்கனவே நடித்து வந்த கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், ராம்குமார் இயக்கும் ஒரு படம் என தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படங்களின் பட்டியல் நீள்கிறது

இன்று(ஜூன் 18) தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாரான ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தனுஷ் நடிக்க உள்ள அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதைப் பிரபல தெலுங்கு இயக்குநரும், தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்குகிறார்.

நேரடி தெலுங்கு படமாகத் தயாராகும் இப்படம் தமிழ்,ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியிட உள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவனம் சார்பில் நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இதர தொழில்நுட்ப மற்றும் நடிகர்களுக்கான தேர்வு அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளது.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வெள்ளி 18 ஜுன் 2021