மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

ட்விட்டரில் 1 மில்லியன் ஃபாலோயர்களை கடந்த அஞ்சலி

ட்விட்டரில்  1 மில்லியன் ஃபாலோயர்களை கடந்த அஞ்சலி

சமூக வலைதளங்களில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இரண்டையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர் திரைப்பட நடிகைகள். இதன்மூலம் தங்களது புதிய புகைப்படங்களை வெளியிடுவதைப் பிரதான வேலையாகக் கொண்டுள்ளனர். நடிகைகள் குஷ்பூ, கஸ்தூரி, காயத்திரி ரகுராம், நடிகை ராதிகா போன்ற தமிழ் நடிகைகள் அரசியல் ரீதியாகவும் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நடிகைகளை அவர்கள் வெளியிடும் புது கிளாமர் புகைப்படங்களுக்காகப் பின்தொடரும் ரசிகர் கூட்டமே அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி.

தமிழில் சில முக்கியமான படங்களில் கதாநாயகி என்கிற இமேஜை புறந்தள்ளி கதைக்குள் தன்னை வைத்து தனது யதார்த்த நடிப்பின் மூலம் தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை அஞ்சலி

இவர் அறிமுமான ‘கற்றது தமிழ்’ படத்திலேயே தனது நடிப்பால் ’யார் இவர்’ எனக் கேட்க வைத்தவர். அதனைத் தொடர்ந்து அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, இறைவி, என சில படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டைப் பெற்றது.

சில நல்ல படங்களில் நடித்திருந்தாலும் சில தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக சென்னையை விட்டு ஐதராபாத்திற்கு இடம் பெயர்ந்தார். தெலுங்கிலும் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழைப் போலவேதான் அங்கும் அவருடைய மார்க்கெட் நிலவரம் இருந்து வருகிறது. இருந்தாலும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

முன்னிணி நாயகர்களுடன் நடிக்காத அஞ்சலி 1 மில்லியன் பின்தொடர்பவர்களை ட்விட்டரில் நேற்று கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

ட்விட்டரில் 1 மில்லியன் மற்றும் அதற்கு மேல் பின்தொடர்பவர்களை கொண்ட சில முக்கிய நடிகைகள்.

சமந்தா - 8.8 மில்லியன்

ஸ்ருதிஹாசன் - 7.8 மில்லியன்

த்ரிஷா - 5.3 மில்லியன்

தமன்னா - 5 மில்லியன்

ஹன்சிகா மோத்வாணி - 5 மில்லியன்

காஜல் அகர்வால் - 4.8 மில்லியன்

கீர்த்தி சுரேஷ் - 3.9 மில்லியன்

ஐஸ்வர்யா ராஜேஷ் - 2.1 மில்லியன்

அமலா பால் - 2.1 மில்லியன்

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 18 ஜுன் 2021