மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

வெளிமாநிலங்களில் தமிழ் சீரியல்கள் படப்பிடிப்பு!

வெளிமாநிலங்களில் தமிழ் சீரியல்கள் படப்பிடிப்பு!

பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கான படப்பிடிப்புகள் மட்டுமே தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் அனைத்தும் பல்வேறு காரணங்களை கூறி ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டது. படப்பிடிப்பை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இதனால் பறிபோனது

தொலைக்காட்சி தொடர்களுக்கான சூட்டிங் முழுக்க முழுக்க தமிழகத்திலேயே நடைபெற்று வந்ததால் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்போது அதற்கும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக தமிழ்நாட்டில் பரவி வரும் நிலையில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது, என்றாலும் சின்னத்திரை சேனல்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் சீரியல்களுக்கு படப்பிடிப்புகள் நடத்தியே ஆக வேண்டும்.

ஒரு சீரியலில் அதிகபட்சம் 15 முதல் 20 எபிசோட்கள் வரை மட்டுமே கையில் வைத்திருப்பார்கள். படப்பிடிப்பு இல்லாவிட்டால் மூன்று வாரங்கள் வரை இருக்கிற எபிசோட்களை ஒளிபரப்பலாம். அதற்குபிறகு கட்டாயம் படப்பிடிப்பை நடத்தியே ஆக வேண்டும்.

இதன் காரணமாக தவிர்க்க முடியாத பல சீரியல்கள் தற்போது வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் கடுமையான விதிமுறைககளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பல தமிழ் சீரியல்களின் படப்பிடிப்பு அங்கு தொடங்கி உள்ளது. நடிகர், நடிகைகள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

தடுப்பூசி, கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்புகளுக்கு இடையில் இந்த படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அங்கு விஜய் தொலைக்காட்சிக்கு தொழில்நுட்ப குழு இருப்பதால் நடிகர், நடிகைகள் மட்டும் அங்கு சென்று நடித்து வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்யலட்சுமி தொடரில் நடிக்கும் கலைஞர்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தி உள்ளார்கள்.

இராமானுஜம்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வெள்ளி 18 ஜுன் 2021