மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

அட்லீ - ஷாரூக் படத்தில் நம்மூர் இசையமைப்பாளர்!

அட்லீ - ஷாரூக் படத்தில் நம்மூர் இசையமைப்பாளர்!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்க்கு மூன்று பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தார் இயக்குநர் அட்லீ. தமிழில் கொடுத்த வெற்றியின் பலனாக பாலிவுட்டைத் தொட்டுவிட்டார்.

சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் கொஞ்சம் செலவு இழுத்து விடுபவர்தான் என்றாலும், இவரின் எந்தப் படமும் வியாபாரத்தில் சறுக்கியதில்லை. கலர்ஃபுல்லான ஒரு மேஜிக் அட்லீ படத்தில் இருக்கும். தமிழ்த் திரையுலகின் இளம் இயக்குநர்கள் மீது பாலிவுட் நடிகர்களுக்கு எப்போதுமே ஓர் ஈர்ப்பு இருக்கும். அப்படி, அட்லீயை பாலிவுட் பக்கம் இழுத்தார் ஷாரூக். கடந்த இரண்டு ஆண்டுகளாக அட்லீ - ஷாரூக் கூட்டணி குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷாரூக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடமிருந்து அட்லீக்கு க்ரீன் சிக்னல் கிடைத்தது. படத்தின் முன் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கினார். தற்போது, மும்பையில் படத்தைத் தொடங்குவதற்கான திட்டங்களில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் பணியாற்றுவதற்கும், பாலிவுட்டில் பணியாற்றுவதற்கும் வொர்க்கிங் ஸ்டைல் மாறுவதால் கொஞ்சம் திணறிவருகிறார். இருப்பினும், சிக்கல்களை எளிதில் சரிசெய்தும் விடுகிறாராம்.

ஷாரூக் கான் இந்தப் படத்தில் இரண்டு ரோல்களில் நடிக்க இருக்கிறாராம். ஒருவர் ஹீரோ, மற்றொருவர் வில்லன். உளவுத்துறை அதிகாரியாக வரும் ஹீரோ, வில்லனைப் பிடிப்பது மாதிரியான கதை என்கிறார்கள். ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்டாக படம் உருவாக இருக்கிறது. எப்படியும், இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்கிறார்கள்.

மற்றுமொரு அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் சுஷாந்த் நடிப்பில் வெளியான ‘தில் பசாரா’ படத்துக்கு இசையமைத்திருந்தார். தற்போது, அட்லீக்காக பாலிவுட் படத்துக்கு இசையமைக்க இருக்கிறாராம்.

ஏற்கெனவே, அட்லீயின் மெர்சல், பிகில் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஷாரூக் படத்திலும் இணைந்தால் அட்லீ - ஏ.ஆர்.கூட்டணியில் மூன்றாவது படமாக இருக்கும்.

சித்தார் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக். இந்தப் படத்தை முடித்த கையோடு அட்லீ படம் தொடங்குகிறது. அட்லீ படத்துக்குப் பிறகு, ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஷாரூக்.

- ஆதினி

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

வெள்ளி 18 ஜுன் 2021