மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

அஜித்தின் அடுத்த படம்!

அஜித்தின் அடுத்த படம்!

ஒரு இயக்குநரைப் பிடித்துவிட்டால் அவருக்கு தொடர்ச்சியாகப் பட வாய்ப்புக் கொடுப்பது அஜித் ஸ்டைல். படத்துக்குப் படம் புதிய இயக்குநரென்றால், ஒர்க்கிங் ஸ்டைல் மாறும். புது இயக்குநருடன் நட்பாவதில் சிரமம் இருக்கும். இவற்றினால் பல கசப்பான அனுபவங்களை கடந்த காலங்களில் சந்தித்தவர். ஒட்டுமொத்தமாக, அஜித்துக்கு ஏற்ற இயக்குநராக இருக்க வேண்டியது அவசியம். அப்படியான, ஒரு இயக்குநர் கிடைத்துவிட்டால், அவருடன் இரண்டு - மூன்று படங்கள் என டிராவல் செய்வார் அஜித்.

இயக்குநர் சிவாவுக்கு வீரம், வேதாளம், விவேகம் & விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களில் நடித்தார் அஜித். தற்பொழுது, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்டப் பார்வை’ முடித்தவர், தற்பொழுது ‘வலிமை’ படத்தில் நடித்துவருகிறார். மீண்டும், மூன்றாவது முறையாக அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஹெச்.வினோத். இவரின் இரண்டாவது படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பெரிய ஹிட். பாலிவுட் படமான பிங்க் ரீமேக் தான் ‘நேர்கொண்டப் பார்வை’ என்றாலும் ஹெச்.வினோத்தின் மேக்கிங் ஸ்டைல் படத்தை தமிழில் ஹிட்டாக்கியது.

அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டது. முடிந்தவரைக்கும் படமும் தயாராகிவிட்டதாம். வலிமை படத்தை சமீபத்தில் பார்த்த அஜித்துக்கு படம் பிடித்துப் போனதால், கதை இருந்தால் சொல்லுங்கள் என்று வினோத்திடம் கூறியிருந்தார் அஜித். அப்படி, மீண்டும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையும் அஜித்துக்குப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

நேர்கொண்டப் பார்வை, வலிமை தொடர்ந்து இந்தப் படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இந்தமுறை, குறுகிய காலத்தில் வேகமாக எடுத்து முடிப்பது போல ஒரு கதையை உருவாக்கியிருக்காராம் வினோத். இரண்டு மாதத்துக்குள் தயாராவது போன்ற ஒரு படமாக இருக்குமாம். அஜித் சினிமா பயணத்திலேயே ஷார்ட் டைமில் உருவாகும் படமாக இது இருக்குமாம்.

ஏன் ஷார்ட் டைம்? இந்த முடிவுக்கு காரணம் இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் எப்போது லாக் டவுன் ஆகும் என்றே சொல்லமுடியவில்லை. பெரிய கதையாக எடுத்தால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகும். படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்குள் அடுத்த லாக் டவுன் வந்துவிட்டால் என்ன செய்வது என்பதால், ஒரே ஷெட்யூலில் முடிப்பது போல ஷார்ட் டைம் படத்தை உருவாக்க இருக்கிறார்களாம். ஏனெனில், வலிமை படமே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய 10 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. அதை எடுக்க முடியாமல் படக்குழு திணறிவருகிறது.

இப்படியான, எந்த சிக்கலும் இல்லாத ஒரு கதையாக இருக்கும் என்கிறார்கள். அஜித்தும் ஷார்ட் டைமில் முடிக்கும் கதையாகவே விரும்புகிறாராம். அதனால் தான் இந்த புதிய முடிவு என்கிறார்கள்.

- தீரன்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 16 ஜுன் 2021