மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

படத்துக்கு படம் ரசிகர்கள் மத்தியிலும் சரி, வசூல் ரீதியாகவும் சரி உச்சத்தைத் தொட்டுவருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் ஹிட்டைத் தொடர்ந்து, விஜய் 65 படம் உருவாகிவருகிறது.

தொடர்ச்சியாக இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துவரும் விஜய்க்கு, ‘விஜய் 65’ படத்தை நெல்சன் இயக்கிவருகிறார். இவர், நயன்தாரா நடித்து வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர். சிவகார்த்திகேயன் நடிக்க டாக்டர் படத்தினை முடித்திருக்கிறார். டாக்டர் ரிசல்ட்க்கு முன்பே, விஜய் இயக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. படத்துக்கான முதல்கட்டப் படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்திருக்கிறது படக்குழு. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடக்க இருக்கிறது.

பொதுவாக, ஒரு படத்தை முழுமையாக முடித்த பிறகே, அடுத்தப் படம் பற்றி யோசிப்பார் விஜய். அதுவரை அவசரப்பட்டு கமிட் செய்யமாட்டார். ஆனால், இந்த முறை ‘விஜய் 66’ படத்துக்கான பேச்சு, இப்போவே துவங்கிவிட்டது. தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தியிலும் மாஸ்டர் வெளியாகி பெரியளவில் கொண்டாடப்பட்டது. அதனால், பான் இந்தியா ரிலீஸாக ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறார் விஜய். அதனால், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

வம்சி யாரென்றால் கார்த்தி, நாகர்ஜூனா நடித்து வெளியான தோழா படத்தை இயக்கியவர். இவர் இயக்கியதில் பெரிய ஹிட் ‘பிருந்தாவனம்’ படம் மட்டும் தான். தோழா படமானது ஒரு பிரஞ்ச் பட ரீமேக். அதனால், அதைக் கணக்கில் கொள்ள முடியாது. அதோடு, இவர் இயக்கி கடைசியாக வெளியான ’மகரிஷி’ பெரியளவுக்கு ஹிட் ஆகவில்லை. வம்சியின் மூவி ஸ்டைல், தெலுங்கில் அவரின் படத்துக்கான வியாபாரங்களை கேட்டுத் தெரிந்திருக்கிறார் விஜய்.

அதோடு, ஒரு நாள் கதை சொல்வதற்காக விஜய்யுடன் சந்திப்பு நடந்திருக்கிறது. முழு கதையையும் சொல்வார் என விஜய் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், படத்தின் ஒன்லைன், படம் எப்படியெல்லாம் இருக்கும் என்கிற பில்டப்புகளை மட்டும் சொல்லியிருக்கிறார். அதனால், முழு கதையையும் சொல்லச் சொல்லியிருக்கிறார் விஜய். விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் சொல்லுவதற்குள், பொதுவெளியில் விஜய்யை இயக்கப் போவதையும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அறிவித்திருக்கிறார் வம்சி.

இந்த சம்பவங்களால் கொஞ்சம் கடுப்பாகிவிட்டாராம் விஜய். அதனால், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதில்லை என்பதை, தயாரிப்பாளரிடம் விஜய் தரப்பு கூறியிருக்கிறது. இதனால், தில் ராஜூவுக்கு பெரிய ஷாக். தற்பொழுது, விஜய்யை சமாதானப்படுத்தும் முயற்சிகள் போய்க் கொண்டிருக்கிறது.

- தீரன்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

புதன் 16 ஜுன் 2021