மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

‘டெடி 2’ உருவாகுமா? ஆர்யா சொன்ன பதில்!

‘டெடி 2’ உருவாகுமா? ஆர்யா சொன்ன பதில்!

ஒரு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால், அதன் இரண்டு, மூன்றாம் பாகங்கள் வெளியாவது இயல்பு.

ஹாலிவுட் சினிமாவிலிருந்து வந்த இந்த டிரெண்டானது, தமிழ் சினிமாவிலும் இப்போது அதிகமாகியிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றியானது அடுத்தடுத்த பாகங்களுக்குத் தூண்டுதலாக இருக்கும் என்பதைத் தாண்டி, ஒரு படம் வெற்றி பெற்றாலே, கட்டாயம் இரண்டாம் பாகம் வந்தாக வேண்டும் எனும் டிரெண்ட் வந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் இரண்டாம் பாகம் என இறங்கிவிடுகிறார்கள் தமிழ்த் திரையுலகத்தினர்.

நடிகர் ஆர்யா, சாயிஷா நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படம் டெடி. தலைகீழாகத்தான் குதிப்பேன் என்பது போல தமிழில் முதல் ஜாம்பி படமான மிருதன் முதல் விண்வெளி படமான டிக் டிக் டிக் படங்களைக் கொடுத்த சக்தி சவுந்தரராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. கரடி பொம்மையை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டிருந்ததால் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டி.ஆர்.பி-யில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

‘டெடி 2 வருமா?’ என நடிகர் ஆர்யாவிடம் கேட்டால், ‘யெஸ்’ என்று பதிலளிக்கிறார். இயக்குநர் சக்தி சவுந்தரராஜனும் இரண்டாம் பாகத்துக்கான பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஆர்யா. அதோடு, பார்ட் 2வில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆர்யாவுக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’, சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ மற்றும் விஷாலுடன் ‘எனிமி’ படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது.

- ஆதினி

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

புதன் 16 ஜுன் 2021