மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

பிராட் பிட் நடிப்பில் அடுத்த ரிலீஸ்!

பிராட் பிட் நடிப்பில் அடுத்த ரிலீஸ்!

ஹாலிவுட்டில் எத்தனையோ ஹீரோக்கள் பிரபலமாக இருக்கலாம். ஆனால், உலகளவில் பிரபலமான ஹாலிவுட் ஹீரோக்கள் வெகுசிலரே. அப்படியான, உலக ரசிகர்களின் விருப்பமான நடிகர்களில் ஒருவர் பிராட் பிட்.

வருடத்துக்கு மூன்றிலிருந்து நான்கு படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தவர், 2018இல் இருந்து நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்த தொடங்கினார். இளம் இயக்குநர்களை ஊக்குவிப்பது, நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரிப்பதில் தீவிரமாக இருந்தார். அதனால், இவர் நடிப்பில் படங்கள் வெளியாவது குறைந்தது.

கடந்த 2019இல் இவர் நடித்து வெளியான படம் 'Once Upon a Time in Hollywood'. குவண்டின் டொரண்டினோ இயக்கத்தில் லியனார்டோ டி காப்ரியோ மற்றும் பிராட் பிட் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். இருவரின் நடிப்புமே பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எந்த அளவுக்கு என்றால், ஆஸ்கர் விருதுவரை படம் சென்றது. சிறந்த நடிகருக்கான விருதும் பிராட் பிட்டுக்குக் கிடைத்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, 2020இல் இவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான பிராட் பிட் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புல்லட் டிரெயின்’. இந்தப் படத்தை David Leitch இயக்கியிருக்கிறார். ஜப்பானிய நாவலான Maria Beetle-யை தழுவி, இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சோனி பிக்சர்ஸ் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. 2020இல் தொடங்கிய படப்பிடிப்பு, கொரோனாவால் தாமதமாகி கடந்த மார்ச் மாதம் முடிந்தது. படத்துக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த புல்லட் டிரெயின் படத்தில் அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுவரை வெளியான சண்டைக் காட்சிகளைவிட, புதுமையான நிறைய விஷயங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம். படத்தை 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

இந்தப் படத்தோடு, The Lost City of D எனும் மற்றுமொரு படத்திலும் பிராட் பிட் நடித்துவருகிறார். இந்தப் படமும் அடுத்த வருட ரிலீஸை டார்கெட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

புதன் 16 ஜுன் 2021