மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

அடிச்சுட்டு கம்முனு படுத்துடுவேன்: அப்டேட் குமாரு

அடிச்சுட்டு கம்முனு படுத்துடுவேன்:  அப்டேட் குமாரு

டாஸ்மாக் வாசல்ல கற்பூரம் ஏத்தி பூஜை போட்டு கண்ணை மூடிக்கிட்டு பயபக்தியோட வேண்டிக்கிட்டு ஒரு ஆஃப் சரக்கையும் வாங்கிட்டு வந்த குடிமகன்கிட்ட எந்த சேனல் சார்பாகவும் இல்லாம நானே மைக்கை நீட்டுறதுக்கு பதிலா கையை நீட்டி, ‘இதுதான் உங்க கடவுளா?’னு கேட்டேன். அதுக்கு அவன், ‘நான் கடவுள் பேரால அடிச்சிக்கிட்டு சாவ மாட்டேங்க. அடிச்சுட்டு கம்முனு படுத்துவேன்னு’ சொல்றான். வாங்கறதுக்கு முன்னாடியே இவ்வளவு தத்துவம் பேசுறானே... குடிச்சுட்டு இன்னும் என்னவெல்லாம் பேசுவானோ?

நீங்க அப்டேட் பாருங்க...

amudu

முகக்கவசம் அணியாத பிரேசில் அதிபருக்கு அபராதம்.

இங்கே இப்படி நடந்திருந்தால், அபாரம்ன்னு பாராட்டி இருப்பாங்க.

நாகராஜசோழன்.MA.MLA.

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

முதல் லாக்டவுணின் போது "ஆறு மாதத்திற்கு மின் கட்டணம் செலுத்த சலுகை வழங்க வேண்டும்"னு ஸ்டாலின் சொன்னாரே, இப்போ அட்லீஸ்ட் ஒரு மாசத்துக்காவது சலுகை வழங்க கூடாதா சார்...

balebalu

அறை ஞாண் கயிறில் ஆரம்பித்து மூக்கணாம் கயிறில்(மாஸ்க்) வளர்ந்து நிற்கிறது மனித வாழ்க்கை

-corona

'வி'சித்திரன்

லிப்ட் மாதிரி வேகமா ஏறுற உடம்புதான், குறையும் போது படிக்கட்டுல இறங்குற மாதிரி மெதுவா இறங்குதுRelieved face

James Stanly

பங்குசந்தை வீழ்ச்சியால் 73000கோடி இழந்த அதானி

இது Gas விலையேற்றத்தை குறிக்கும்...

Mannar & company

உண்மையில் 'சின்னத்திரை' என்று சொல்லுவது டிவியைவிட ஸ்மார்ட்போன்களுக்கே பொருத்தமாக இருக்கிறது!

mohanram.ko

ஒரு மாசத்துக்கு பிறகு நாளைக்கு தான் போறேன் மாமா..

வேலைக்கா மாப்ள?

வேலைக்கா? டாஸ்மாக் கடைக்கு மாமா

Poetu PrabuG

மூடியது மூடியதாகவே இருக்கட்டும்.

டாஸ்மாக்கா மாப்ளை.

மாஸ்க் போட்டு மூடியிருக்க என் பொண்டாட்டி வாயை சொன்னேன் மாமா...

ஆனந்த்

அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு!

பயிற்சி எல்லாம் தேவையில்லை வீட்டில் செய்யும் அர்ச்சனையை இனி கோவில்களில் செய்வார்கள்..

சரவணன். ℳ

கோவிலுக்கு போனாலும் சூடம் ஏத்தி கும்பிடறாங்க. டாஸ்மாக் கடைல சரக்கு வாங்கினாலும் சூடம் ஏத்தி கும்பிடறாங்க...யார்றா நீங்கலாம்ன்னு கேட்டா தமிழன்னு சொல்றாங்க...

தர்மஅடி தர்மலிங்கம்

டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர்!

நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து டாஸ்மாக் கடைகளைத் திறந்த நீங்களா பாஸ் இப்படி சொல்றீங்க..??

மயக்குநன்

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகர்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையை உடனே நிறுத்த வேண்டும்!- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கே பாதுகாப்பில்லை போலிருக்கே..?

கோழியின் கிறுக்கல்!!

இலையுதிர் காலத்திற்குப் பிறகு எத்தனை வசந்த காலங்கள் வந்தாலும், ஒரு முறை உதிர்ந்த இலை மீண்டும் அதே இடத்தில் ஒட்டுவதில்லை!!

அது போலவே சில உறவுகளும்…

- லாக் ஆப்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

செவ்வாய் 15 ஜுன் 2021