மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

அஜித், விஜய் மற்றும் சூர்யாவுக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுக்கும் ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என மூன்று ஹிட்களை விஜய்க்குக் கொடுத்தவர். நூறு கோடி க்ளப் இயக்குநரின் இன்றைய சூழல் பாதாளத்திலும் பாதாளத்தில் கிடக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தர்பார். ரஜினி, நயன்தாரா நடிக்க அனிருத் இசையில் வெளியானது . மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினி ஆக்‌ஷன் காட்டியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, படம் பெரிதாக ஓடவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து, எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ராங்கி. த்ரிஷா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு கதை எழுதினார். இந்தப் படம் தயாராகியும், ரிலீஸாக முடியாமல் தவித்துவருகிறது.

தர்பார் முடித்த கையோடு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநராக ஒப்பந்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்படி, விஜய் நடிக்க விஜய் 65 படத்தைத் தயாரிக்கத் தயாராகிவந்தது சன்பிக்சர்ஸ். ஒரு மாலை நேரத்தில் விஜய்யை சந்தித்து கதையைச் சொன்னார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், இவர் சொன்ன கதையில் விஜய் திருப்தியாகவில்லை. இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த படங்களின் கலவையாக அந்தக் கதை இருந்ததால் ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்தார் விஜய். அதனால், சன்பிக்சர்ஸ் நிறுவனம் வேறு இயக்குநரைத் தேடியது. அதன்பிறகு, நெல்சன் படத்துக்குள் வந்தார். விஜய் 65 படமானது நெல்சன் இயக்க அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் தயாராகிவருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பையும் படக்குழு முடித்துவிட்டது.

விஜய் படம் இல்லையென்றாகிவிட்டது என்பதால் ஒரு அனிமேஷன் படமொன்றைத் துவங்கத் திட்டமிட்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்காக, பிரபல அனிமேஷன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்திவந்தார். ஆனால், அனிமேஷன் படத்துக்கு முன்பாக பிரபல நடிகரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுத்துவிட வேண்டும் எனவும் திட்டமிட்டிருந்தார். அதற்குக் காரணம் இருக்கிறது.

விஜய் படத்திலிருந்து விலகிய உடனே அனிமேஷன் படத்தைத் துவங்கினால் திரையுலகில் பெயர் கெட்டுவிடும். ஹீரோவே கிடைக்காமல் அனிமேஷன் படத்துக்குப் போய்விட்டார் என்கிற பேச்சுவந்துவிடும் என்பதால், தமிழில் சில நடிகர்களை முயற்சி செய்ததாகச் சொல்லப்படுகிறது.

விஜய் படம் உறுதியான நேரத்திலேயே, தெலுங்கில் அல்லு அர்ஜூனும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உறுதியாகியிருந்தார். இந்நிலையில், விஜய் நோ சொன்னதால், அல்லு அர்ஜூனை அணுகியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், அல்லுஅர்ஜூனும் நடிக்கத் தயக்கம் காட்டுகிறாராம்.

ரஜினியை வைத்துப் படம் எடுத்தவரால், எத்தனை முறை முயற்சி செய்தும் அல்லு அர்ஜூனை சந்திக்கமுடியவில்லை என்கிறார்கள். இந்த சம்பவங்களெல்லாம், நிச்சயம் ஏ.ஆர்.முருகதாஸூக்கு திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய சரிவு என்கிறார்கள் திரையுலகத்தினர்.

- தீரன்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

செவ்வாய் 15 ஜுன் 2021