மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

சீரியஸ் இயக்குநர், காமெடி நடிகர்.. புது முயற்சி !

சீரியஸ் இயக்குநர், காமெடி நடிகர்..  புது முயற்சி !

ஆர்.ஜே.வாக இருந்து சினிமாவில் காமெடி ரோல்களில் நடித்து, ஹீரோவாக மாறி, இப்போது இயக்குநராகவும் மாறியிருக்கிறார். ஆர்ஜே பாலாஜி. இவர் ஹீரோவாக நடித்த `எல்.கே.ஜி' மற்றும் இயக்கிய `மூக்குத்தி அம்மன்' என இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ச்சியாக வெற்றி வரும் போது, அடுத்தக் கட்ட நகர்வில் கவனம் அதிகம் வேண்டும். கொஞ்சம் சொதப்பினாலும் அடுத்தடுத்தப் படங்களின் வியாபாரத்தைப் பாதிக்கும். அதனால், மூக்குத்தி அம்மன் படத்துக்குப் பிறகு, இந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தை தமிழில் ரீமேக் செய்து இயக்கி, நடிக்க தயாரானார் ஆர்.ஜே.பாலாஜி. பாலிவுட்டில் செம ஹிட்டான படம். ஆயுஷ்மான் குர்ரானா ஹீரோவாக நடித்திருப்பார்.

பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்குக்கான ஸ்கிரிப்ட் பணிகள் எல்லாம் முடிந்து வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை துவங்கத் தயாராகிவருகிறார். இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்தப் படம் பற்றிய செய்தி கிடைத்திருக்கிறது.

இயக்குநர் ராம் படத்தில் ஹீரோவாக பாலாஜி நடிக்க இருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. தன்னுடைய படங்களில் உணர்வுப்பூர்வமான, சீரியஸான விஷயங்களைப் பேசக்கூடியவர் ராம். சீரியஸான விஷயங்களையும் காமெடியாகச் சொல்லக் கூடியவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர்கள் இரண்டு பேரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க கோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் காத்திருக்கிறது.

நமக்குக் கிடைத்த தகவல்படி, பக்கா எண்டர்டெயின்மெண்ட் காமெடி படமாக இயக்குநர் ராம் இந்தப் படத்தை உருவாக்க இருக்காராம். பாலாஜியும் - ஒரு சின்ன பையனும்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இது, ஓடிடிக்காக பிரத்யேகமாக உருவாகும் படம் என்கிறார்கள். நேரடியாக ஓடிடி ரிலீஸூக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு படத்தை துவங்கலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறார்கள்.

- ஆதினி

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

செவ்வாய் 15 ஜுன் 2021