மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

மரணத்திலும் மக்களுக்கு உதவிய நடிகர்!

மரணத்திலும் மக்களுக்கு உதவிய  நடிகர்!

திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த நடிகர் மம்முட்டி, தனக்கான பாதுகாப்பு வளையத்தைக் கடந்து சென்று ஓரமாக அமர்ந்திருந்த சஞ்சாரி விஜய் என்கிற கன்னட நடிகரை அவரது நடிப்புக்காக மனம்திறந்து பாராட்டினார். அதுவரை அந்த இளம் நடிகரை நேரில் சந்தித்திராத மம்முட்டி, 'அவனல்ல அவளு' படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்து போனதாகப் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

கன்னட சினிமாவில் அறிமுக நிலையில் இருந்த நடிகர் சஞ்சாரி விஜய்யை இந்தியாவின் முன்னணி நடிகர் வலிய சென்று பாராட்டியது அந்த நடிகருக்கான கௌரவமாகக் கருதப்பட்டது.

ரங்கப்பா ஹோக்பிட்னா' என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகுக்கு அறிமுகமானவர் சஞ்சாரி விஜய். இவர், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'அவனல்ல அவளு' என்ற படத்தில் திருநங்கையாக நடித்தார். அந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது.

கடந்த 12ஆம் தேதி சஞ்சாரி விஜய் தன்னுடைய நண்பருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சறுக்கி அருகே இருந்த விளக்கு கம்பம் மீது மோதியுள்ளது. இதையடுத்து, தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சாரி விஜய்க்கு, மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

அதை நீக்க அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சஞ்சாரி விஜய் நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது மறைவுக்குத் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சஞ்சாரி விஜய் மூளைச்சாவு அடைந்ததையடுத்து, அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

- இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

செவ்வாய் 15 ஜுன் 2021