மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

பிசாசு 2-வுக்கு இரண்டு மடங்கு சம்பளம் பெறும் ஆண்ட்ரியா

பிசாசு 2-வுக்கு இரண்டு மடங்கு சம்பளம் பெறும் ஆண்ட்ரியா

புதிதாக எதையாவது முயற்சி செய்துவிட வேண்டும் எனும் முனைப்புடன் படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சமீபத்தில், இவரின் இயக்கத்தில் சைக்கோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருந்தார். இளையராஜா இசையில் படம் வெளியானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தைத் தொடங்கினார் மிஷ்கின். ஆனால், விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் நடுவே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் படத்திலிருந்து விலகினார். உடனடியாக, பிசாசு 2 படத்தைத் துவங்கினார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக டி.முருகானந்தம் தயாரிக்க, பிசாசாக ஆண்ட்ரியா நடித்துவருகிறார். கடந்த டிசம்பரில் படப்பிடிப்பு துவங்கியது. ஜனவரியிலிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ஆண்ட்ரியா.

சமீபத்தில் கூட, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் உருவான விதம் குறித்து சுவாரஸ்ய தகவல்களைக் கூட பகிர்ந்தார். ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகிவருகிறது.

தமிழகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததும் உடனடியாக படப்பிடிப்பைத் துவங்கிவிடும் திட்டத்தில் இருக்கிறார் மிஷ்கின். இந்தப் படத்துக்காக ஆண்ட்ரியா இரண்டு மடங்கு சம்பளம் அதிகமாகப் பெறுகிறார். அதற்கு காரணம் இருக்கிறதாம்.

பொதுவாக, 60 முதல் 70 லட்சம் வரை படங்களுக்கான சம்பளமாகப் பெறுகிறார் ஆண்ட்ரியா. இந்நிலையில், பிசாசு 2வுக்கு ஒன்றரை கோடி வரைக்கும் சம்பளம் கேட்டிருக்கிறார். அதற்கு காரணம், படத்தில் ஒரு நீளமான காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க வேண்டுமாம். அதனால், பெரும் தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார். அதன்பிறகு, படக்குழு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவரின் வழக்கமான சம்பளத்தை விட ஒரு மடங்கு கூடுதலாகக் கொடுக்கப் படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாம்.

பிசாசு முதல் பாகத்தை இயக்குநர் பாலா தயாரித்திருந்தார். நாயகியாக பிரயாகா நடித்திருந்தார். அரோல் கரோலி படத்துக்கு இசையமைத்திருந்தார். பாலாவிடம் முறையாக அனுமதி பெற்று, இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் மிஷ்கின்.

- தீரன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

திங்கள் 14 ஜுன் 2021