மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

கமல் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

கமல்  படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

இளம் இயக்குநர்களின் படங்களில் நடிப்பதில் உச்ச நடிகர்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். ஹெச்.வினோத்தை (வலிமை) அஜித்தும், நெல்சனை (விஜய் 65) விஜய்யும், சிவாவை (அண்ணாத்த) ரஜினியும் தேர்ந்தெடுத்தது போல கமல்ஹாசனின் தேர்வாக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

விஜய் நடிக்க மாஸ்டர் எனும் பெரிய ஹிட் கொடுத்த லோகேஷின் அடுத்த படம் ‘விக்ரம்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையில் இப்படம் உருவாக இருக்கிறது.

கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கான அறிமுக வீடியோ இணையத்தில் வைரலானது. கேங்ஸ்டர் டிராமாவாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகள் பிரதானமாக இருக்குமாம். அதுவும், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இடம்பெற இருக்கிறதாம். ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்களில் புதுமையாக எதையாவது மேற்கொண்டாக வேண்டுமென்று விரும்புகிறார் லோகேஷ் கனகராஜ். அதனால், இளம் சண்டைக் கலைஞர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் சண்டை இயக்குநர்களாக தேசிய விருது வென்ற கலைஞர்களான ‘அன்பறிவ்’ இரட்டையர்கள் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஆக்‌ஷன் படத்துக்கு பெயர் போன கே.ஜி.எஃப் படத்துக்கு சண்டை இயக்குநராக பணியாற்றியவர்கள் அன்பறிவ். லோகேஷின் முந்தைய படமான மாஸ்டரிலும் இவர்களே சண்டைக் கலைஞர்களாக பணியாற்றினார்கள்.

மாஸ்டரில் பணியாற்றும் போதே இவர்களின் மீது இம்ப்ஸ்ரெஸ் ஆகியிருக்கிறார் லோகேஷ். அதனால், இந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்துவிட்டார் என்கிறார்கள்.

2013ஆம் ஆண்டு ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் மூலம் அன்பறிவ் சண்டை இயக்குநர்களாக அறிமுகமானார்கள். அதன் பின்பு மெட்ராஸ்,மாயா, ‘கபாலி, இருமுகன், காஷ்மோரா, சத்ரியன், ஜூங்கா, கைதி, ‘கே.ஜி.எஃப்.சேப்டர்-2, டாக்டர், அயலான்ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

திங்கள் 14 ஜுன் 2021