மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

தனுஷ் நடிக்கும் கேரக்டர்!

தனுஷ் நடிக்கும் கேரக்டர்!

இந்த வருடத்தில் தனுஷூக்கான முதல் ரிலீஸ் கர்ணன். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் சாதிய கொடுமைகளுக்கு சாட்டையடிக் கொடுக்கும் படமாக வெளியாகி நல்ல ஹிட். அடுத்து, தனுஷூக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வருகிற ஜூன் 18ல் படம் வெளியாகிறது.

கடந்த நான்கு மாதமாக ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் அதிக பட்ஜெட் கொண்டப் படமாக இது உருவாகி வருகிறது.

ஹாலிவுட் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே தமிழில் ஒரு படத்தின் படப்பிடிப்பைத் துவங்கினார் தனுஷ். அப்படி, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ‘தனுஷ் 43’ படப்பிடிப்பு துவங்கியது. தனுஷூக்கு நாயகியாக மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்கிறார். பிரசன்னா, அருண்விஜய் முக்கிய ரோல்களில் நடிப்பதாகவும் தகவல். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

டி43 படத்தில்துப்பறியும் பத்திரிகையாளராக நடிக்கிறாராம் தனுஷ். இந்தப் படமும் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக உருவாக இருக்காம். கார்த்திக் நரேனின் முதல் படமும் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ஜானரே என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறார் தனுஷ். முதல்கட்டமாக கார்த்திக் நரேன் படத்தின் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், பாலாஜிமோகன் இயக்கத்தில் உருவாகும் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து, ராட்சன் இயக்குநர் ராம்குமார், வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் படங்களும் லைன் அப்பில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது. கர்ணன், ஜெகமே தந்திரம் தொடர்ந்து இந்த வருடத்தில் தனுஷூக்கு வெளியாகும் மூன்றாவது படம் ‘அட்ராங்கி ரே’. அக்‌ஷய்குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்திருக்கும் பாலிவுட் படம்.

- ஆதினி

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

ஞாயிறு 13 ஜுன் 2021