மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

அண்ணாத்த ஷூட்டிங்: குஷ்பு தாமதமாக கலந்துகொள்ள காரணம்!

அண்ணாத்த ஷூட்டிங்: குஷ்பு தாமதமாக கலந்துகொள்ள காரணம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் 167 படங்கள் வெளியாகிவிட்டது. ஆனால், ‘ரஜினி 168’ கொஞ்சம் ஸ்பெஷல். ஏனென்றால், இதுவரை அவர் நடித்த படங்களை விட, இந்தப் படத்தில் கொஞ்சம் உணர்வுப் பூர்வமாக ஒன்றிவிட்டார் ரஜினி. அதிக ஆர்வத்துடன் மிகவும் விருப்பத்துடன் ரிலீஸை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் ரஜினி.

வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என அஜித்துக்கு நான்கு ஹிட் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினியின் 168வது படமாக ‘அண்ணாத்த’ உருவாகிவருகிறது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையமைப்பில் படம் தயாராகிவருகிறது.

கொரோனா முதல் அலை துவங்குவதற்கு முன்பு ‘அண்ணாத்த’ துவங்கியது. அப்போதே, 60% படப்பிடிப்பை படக்குழு முடித்துவிட்டது. மீதிப் படப்பிடிப்புக்காக கடந்த டிசம்பரில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், படக்குழுவில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக படப்பிடிப்புத் தள்ளிப் போனது. இறுதியாக, கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கி முக்கால் பாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. குறிப்பாக, ரஜினிக்கான பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்டது.

சமீபத்தில், படம் முடிந்த வரைக்கும் முதல் கட்ட எடிட்டிங்கை முடித்து படத்தைப் பார்த்திருக்கிறது படக்குழு. படமாக்கிய வரைக்கும் சிறப்பாக வந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். ரஜினி ரசிகர்களுக்கு புது அனுபவமாக இப்படம் இருக்கும் என்கிறார்கள்.

படத்துக்காக ஷூட்டிங் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது. அரசின் அனுமதி கிடைத்த உடன் படப்பிடிப்பை முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறது படக்குழு. இந்த ஷூட்டிங்கில் குஷ்பு கலந்துகொள்ள இருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கலந்துகொண்டார் குஷ்பு. தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்ததால், அந்த நேரத்தில் நடந்த படப்பிடிப்பில் குஷ்பு கலந்துகொள்ளவில்லை. அதனால், பெண்டிங் ஆகிவிட்ட அவரின் காட்சிகளை முடிக்க இருக்கிறார்கள்.

கிராமத்தில் நடக்கும் கதையாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அண்ணாத்த படம் தீபாவளி ரிலீஸென்பதால் படத்திற்கான பணிகளை முடிக்கிவிட்டிருக்கிறது தயாரிப்பு தரப்பு.

- ஆதினி

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

ஞாயிறு 13 ஜுன் 2021