மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

நயன்தாரா & ஆண்ட்ரியாவின் புதுப்பட தகவல்கள்!

நயன்தாரா & ஆண்ட்ரியாவின் புதுப்பட தகவல்கள்!

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. பெரும்பாலும் த்ரில்லர், ஹாரர் ஜானர்களில் ஹீரோயின் சப்ஜெக்டுகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழின் இரண்டு சீனியர் நடிகைகளின் அடுத்த படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

நடிகை ஆண்ட்ரியாவுக்கு அரண்மனை 3, வட்டம், மாளிகை, கா மற்றும் மிஷ்கினின் பிசாசு 2 படங்கள் கைவசம் இருக்கின்றன. இதில், சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 3 படமும், மிஷ்கினின் பிசாசு 2 படமும் ஓரளவுக்கு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

இந்த நிலையில், ஆண்ட்ரியாவின் அடுத்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் தயாரிக்க இருக்கிறார். இவர், அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். அதில், ஒரு படத்தில் ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை நடன இயக்குநர் பாபி மாஸ்டர் இயக்க இருப்பதாகவும் தகவல். இந்தப் படத்துக்காகப் பெரும் தொகையைச் சம்பளமாகப் பெற இருப்பதாகவும் தகவல்.

நாயகி முக்கியத்துவம் கொண்ட படங்களில் அதிகமாக நடித்துவரும் நடிகை நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித்துக்கு நாயகியாக ஒரு பக்கம் நடித்தாலும், ஹீரோயின் முக்கியத்துவம் கொண்ட படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.

ரஜினியுடன் அண்ணாத்த, மிலிந்த் இயக்கத்தில் நெற்றிக்கண் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்கள் கைவசம் இருக்கின்றன. இதில், ஜூலை மாதம் நெற்றிக்கண் படம் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. விஜய் சேதுபதி, சமந்தாவுடன் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது.

இந்த நிலையில், நயன்தாரா அடுத்தடுத்த இரண்டு படங்களை ட்ரீம் வாரியஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. முதல் படத்தை எலி பட இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்க இருக்கிறாராம். ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் போட காரணம் நயனுக்குப் பேசப்பட்ட சம்பளம்தான் என்கிறார்கள்.

விரைவிலேயே ஆண்ட்ரியா மற்றும் நயன்தாராவின் மேற்கண்ட அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன. இருவரின் படத்திலும் இருக்கும் ஓர் ஒற்றுமை, பெரும் தொகை சம்பளம் என்பதுதான். இதில், ஆண்ட்ரியா 70 லட்சம் வரை சம்பளம் பெறுகிறாராம். இதுவரை பெறப்பட்ட சம்பளத் தொகையைவிட நயன்தாராவுக்கு இந்தப் படத்தில் அதிகம் என்கிறார்கள்.

- தீரன்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

ஞாயிறு 13 ஜுன் 2021