மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

பிரபலமான படங்களில் முதல் இடத்தில் மாஸ்டர்!

பிரபலமான படங்களில் முதல் இடத்தில் மாஸ்டர்!

திரைப்படங்கள் பற்றிய தகவல்கள், வியாபாரம், பாக்ஸ்ஆபீஸ் வசூல் போன்ற தகவல்களை பதிவு செய்து வரக்கூடிய இணையதளங்கள் பிராந்தியமொழிகளில், மற்றும் ஆங்கில மொழியில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.

வெள்ளையாக இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான், அதிகம் பேசாதவன் அதிபுத்திசாலி என இந்திய மக்களின் பொதுப்புத்தியில் நூற்றாண்டு காலமாக பதியப்பட்டு வந்திருக்கிறது.

அதனால்தான் தவறான செய்திகள், தனி நபர் புகழ் பாடக்கூடிய,அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடக் கூடிய, ஆங்கில ஊடகங்களை திரைப்பட துறையினர் தனிமதிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

பிராந்திய மொழிகளில் உண்மை செய்திகளை வெளியிடக் கூடிய ஊடகங்கள் இரண்டாம் தர குடிமக்களை போன்று திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்களால் நடத்தப்படும் அவலம் இன்றுவரை தொடர்கின்றன.

இந்தியப் படங்கள் பற்றி தரவரிசைபடுத்தும் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ள பட்டியலில் விஜய் நடித்து இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு வருவது வாடிக்கையான ஒன்று. தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை தனக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் திரைப்படங்களோடு, வெப் சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஐஎம்டிபி ப்ரோ தளத்தின் தரவுகள், அந்தந்த திரைப்படங்களின் பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மலையாளப்படமான த்ரிஷ்யம் -2, தனுஷ் நடித்து வெளியான தமிழ் படமான கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக செய்தி வெளியிடப் பட்டுள்ளது. நடிகை தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஐஎம்டிபி வெளியிட்டுள்ள 2021ம் வருடம் இதுவரை பிரபலமான திரைப்படங்கள்/வெப் சீரிஸ் முழு பட்டியல்

1. மாஸ்டர்

2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)

3. தி வைட் டைகர்

4. த்ரிஷ்யம் -2

5. நவம்பர் ஸ்டோரி

6. கர்ணன்

7. வக்கீல் ஸாப்

8. மஹாராணி (வெப் சீரிஸ்)

9. க்ராக்

10. தி கிரேட் இண்டியன் கிச்சன்

இந்தப் படங்கள்/வெப் சீரிஸ் வெளியான அடுத்த 4 வாரங்களில், அந்தந்த படைப்புகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ள பக்கங்கள் அதிகப் பார்வைகளை பெற்றுள்ளது இந்த அத்தனை படைப்புகளுமே 7 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பீடைப் பெற்றுள்ளன என செய்தி வெளியாகி உள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில் 5க்கு மேல் பெறுவது சிறப்பானது என திரைதுறையினர் கூறி வருகின்றனர். இது இயல்பாக கிடைக்ககூடியதா என்பது பற்றி திரைத்துறையினர் மத்தியில் விசாரித்தபோது வெகுஜனங்களால் கொண்டாடப்படும் படங்கள் இயல்பாகவே பட்டியலில் இடம்பிடித்துவிடும்.

அவற்றை தவிர்க்க முடியும் படைப்புரீதியாக தகுதியில்லாத படங்கள், பிரபலமாகாத படங்களையும் இதில் இடம் பெற செய்வதற்கு என்றே ஏஜென்சிகள் எல்லா மொழிகளிலும் உண்டு.

படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், இணையதளம், அச்சு ஊடகங்களில் படம் பற்றிய பிரமிப்பூட்டும் செய்திகளை தொடர்ந்து வெளியிட செய்வார்கள் இதன் காரணமாக ஐஎம்டிபியில் இடம்பெற்றுவிடும் என்கின்றனர்.

-இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

சனி 12 ஜுன் 2021