மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

ஆர்.பி.சௌத்ரி, நடிகர் விஷாலுக்கு சம்மன்!

ஆர்.பி.சௌத்ரி, நடிகர் விஷாலுக்கு  சம்மன்!

தென் இந்திய சினிமாவில் தயாரிப்பு, விநியோகம், பைனான்ஸ் என மூன்று தளங்களிலும் தவிர்க்க முடியாதவர் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி. 95க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இதுவரை ஆர்.பி.சௌத்ரி மீது எந்தவிதமான புகாரும் வந்ததில்லை.

இந்த நிலையில் நடிகர் விஷால் ஆர்.பி.சௌத்ரியிடம் தான் கடன் பெற்றதாகவும், கடனை திருப்பி செலுத்திய பிறகும் கடனுக்காக கையெழுத்திட்டு கொடுத்த டாக்குமெண்டுகளை திருப்பித் தரவில்லை என்றும் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தியதில் விஷால் 3 கோடி கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்தும் அதற்காக வழங்கப்பட்ட காசோலைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஆர்.பி.செளத்ரி திரும்ப வழங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஆர்.பி.சௌத்ரி கூறும்போது எங்களிடம் விஷால் கடன் வாங்கியது உண்மை. அதற்காக சில ஆவணங்களும், காசோலைகளும் எங்களிடம் கொடுத்ததும் உண்மை. வாங்கிய கடனை அசலும், வட்டியும் சேர்த்து விஷால் திருப்பிக்கொடுத்து விட்டார். இருந்தபோதிலும் அவர் கொடுத்த ஆவணங்களை பராமரித்து வந்தவர், திடீர் என மரணமடைந்ததால் உரிய நேரத்தில் விஷால் சம்பந்தபட்ட ஆவணங்களை திரும்ப கொடுக்க முடியவில்லை என கூறி இருந்தார்.

விசாரணையை முடித்த காவல்துறையினர், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அவர் மீது புகார் அளித்த நடிகர் விஷால் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். இருவர் சார்பிலும் அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என்று தெரிகிறது.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

சனி 12 ஜுன் 2021