மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

சிம்பு மகிழ்ச்சி.. மீண்டும் ரிலீஸாகும் ஈஸ்வரன்!

சிம்பு மகிழ்ச்சி.. மீண்டும் ரிலீஸாகும் ஈஸ்வரன்!

குறைந்த காலத்துக்குள் பரபரப்பாக எடுத்துமுடிக்கப்பட்டு, ரிலீஸான படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியானது. விஜய்யின் மாஸ்டர் படத்துக்குப் போட்டியாக தைரியமாக களமிறங்கி வீரமாக தோல்வியடைந்தது. மாஸ்டருடன் வெளியானதால், எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.

ஈஸ்வரன் படமானது வியாபார ரீதியாக பெரிதும் செல்ஃப் எடுக்காவிட்டாலும் படத்தில் இடம்பெற்ற ‘மாங்கல்யம்’ பாடல் ரசிகர்களை ஈர்த்தது. அதோடு, சிம்புவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெறுவதற்கு முக்கிய காரணமாக இந்தப் படம் அமைந்தது. ஏனெனில், சிம்பு படமென்றாலே சிக்கல் என்கிற சர்ச்சையை உடைத்தெறிந்து, நேரத்துக்குப் படப்பிடிப்பு வருவது, இயக்குநரின் ஹீரோவாக மாறியதை உலகத்துக்கு எடுத்துக் காட்டிய படம் ஈஸ்வரன். அதனால், சிம்புவுக்கு வெற்றிப் படமே.

நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமை விற்பனையாகாமல் இருந்துவந்தது. அதற்கு படக்குழு சொன்ன விலைதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஏனெனில், தயாரிப்பு தரப்பு படத்துக்காக பத்து கோடி விலை நிர்ணயித்திருந்தது. ஆனால், எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை. இறுதியாக, 3 கோடிக்கு ஈஸ்வரன் படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது டிஸ்னி+ஹாட்ஸ்டார்.

இறுதியாக, மீண்டும் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது ஈஸ்வரன். திரையரங்கில் எதிர்பார்த்த ஹிட் கிடைக்காவிட்டாலும், டிஜிட்டல் தளத்தில் பெரிய ரீச் இருக்கும் என்று நம்புகிறார்கள். பொதுவாக, திரையரங்கில் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாத பல படங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும், ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும். கமர்ஷியல் படமென்பதால் நிச்சயம் ஓடிடியில் நல்ல ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவுக்கும் இந்தப் படம் வெளியாவது செம ஹேப்பிதான். அதன்படி, ஈஸ்வரன் படமானது இன்று (ஜூன் 12) ஆம் தேதி வெளியாகியுள்ளது. விரைவிலேயே டிவியிலும் வெளியாக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ அடுத்து ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம். தொடர்ந்து, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’, கெளதம் இயக்கத்தில் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

- ஆதினி

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

சனி 12 ஜுன் 2021