மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

இந்தியா: ஏஞ்சலினா ஜோலி பட ரிலீஸில் புது ஏற்பாடு!

இந்தியா: ஏஞ்சலினா ஜோலி பட ரிலீஸில் புது ஏற்பாடு!

ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஏஞ்சலினா ஜோலி. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராக, தயாரிப்பாளராகவும் ஹாலிவுட்டில் தனக்கான இடத்தைப் பதித்துள்ளார். 1982-லிருந்து படங்கள் நடித்துவரும் ஏஞ்சலினாவின் திரைப்படங்களுக்கு இப்போதும் எதிர்பார்ப்பும்,வரவேற்பும் இருக்கிறது. பொதுவாக,நடிகைகளுக்கு சினிமாவில் ஆயுட்காலம் குறைவு. குறைந்தது 10 வருடங்களில் பீல்டு அவுட் ஆகிவிடுவார்கள். அதையெல்லாம் உடைத்தெறிந்தவர் ஏஞ்சலினா.

இவரின் நடிப்பில் கடந்த மே 14ஆம் தேதி வெளியான படம் `Those Who Wish Me Dead'. இந்தியா மாதிரி சில நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், அந்தப் பகுதிகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் மட்டும் வெளியானது. ஹெச்.பி.ஓ மேக்ஸ் தளத்திலும் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

இந்திய ரசிகர்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவ்வில்லை. தற்பொழுது, இந்தப் படத்தை மற்ற நாடுகளுக்கும் கொண்டுப் போய் சேர்க்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். திரையரங்கு இன்னும் திறக்காத சூழலில் எப்படியென்று யோசிக்கலாம்.

டிக்கெட் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் புக் மை ஷோ தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்கிறார்கள். ஏற்கெனவே, ஸாக் ஸ்னைடரின், `ஜஸ்டிஸ் லீக்' மாதிரி சில படங்களை இந்த மாதிரி லைவ் ஸ்ட்ரீம் செய்திருக்கிறார்கள்.

தற்பொழுது, ஏஞ்சலினா ஜோலியோட Those Who Wish Me Dead ஒளிப்பரப்பாகிறது. இந்தப் படத்தை ஒரு முறை பார்ப்பதற்கு, 499 ரூபாயோ அல்லது டவுன்லோட் செய்து ஆஃப் லைனில் பார்க்க வேண்டுமென்றால் 799 ரூபாயோ கட்டி படத்தைப் பார்க்கலாம்.

- ஆதினி

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

சனி 12 ஜுன் 2021