மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ; யார் தேர்ந்தெடுக்கப் போகிறார் ?

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ; யார் தேர்ந்தெடுக்கப் போகிறார் ?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் பெண் நடிகை நயன்தாரா. உச்ச நடிகர்களுக்கு நாயகியாக ஒரு பக்கம் நடித்துவந்தாலும், சோலோ ஹீரோயினாகவும் பாக்ஸ் ஆபீஸில் கலக்குகிறார் நயன்தாரா. நல்ல கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அப்படி, அவர் நடிப்பில் அடுத்த ரிலீஸ் ‘நெற்றிக்கண்’.

நாயகி முக்கியத்துவம் கொண்ட இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார். சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தில் பார்வை சவால் கொண்ட கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். திரையரங்க ரிலீஸூக்காகத் திட்டமிட்ட இப்படம், ஒடிடியில் வெளியாக டிஜிட்டல் தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

ஏற்கெனவே, அம்மனாக நயன்தாரா நடித்து வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி செம ஹிட். பொதுவாக, ஒரு படம் வெளியாகி பெறும் வசூல் சாதனையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தப் படத்தின் வியாபாரம் இருக்கும். அப்படி, ஓடிடியில் வெளியான முந்தைய படத்தின் வெற்றியே, அடுத்த படத்தின் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது.

முந்தைய படங்கள் பெற்ற வரவேற்பினால், நெற்றிக்கண் படத்துக்கு பெரும் விலையைச் சொல்கிறதாம் தயாரிப்புத் தரப்பு. ஓடிடி நிறுவனங்களும் பெரும் விலை கொடுத்து தமிழ் படங்களை வாங்குவதில்லை. சந்தையில் வியாபாரம் செய்வது போல, பேச்சுவார்த்தை நடத்தி விலையை அடித்துப் பேசி வாங்குகிறது ஓடிடி. இந்தப் படத்தை வாங்க ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் நிறுவனங்கள் போட்டி போட்டுவருகிறது. எப்படியும், ஹாட்ஸ்டார் இப்படத்தைக் கைப்பற்றும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினியுடன் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய்சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்கள் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகிவரும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

சனி 12 ஜுன் 2021