மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

காரைக்குடிக்கு நகரும் சூர்யா 40 படப்பிடிப்பு

காரைக்குடிக்கு நகரும் சூர்யா 40 படப்பிடிப்பு

சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகனன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார். பாண்டிராஜ் இயக்கிவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2021 பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.அப்போது நாயகன் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்ததால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஒருவாரம் மட்டும் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், 2021மார்ச் 13 மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரை வைத்து சண்டைக் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடந்த படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது.

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் ஜூன் 7 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள், சூர்யா ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பாண்டிராஜ், சூர்யா 40 படம் பற்றியும் பேசியிருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “35% படம் முடிந்துள்ளது. எடுத்தவரைக்கும் நன்றாக வந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் தொடங்கப்படும். எங்கள் குழுவினர் அதற்கு தயாராக உள்ளனர்.

படத்தின் தலைப்பு முறையான அறிவிப்போடு வெளியாகும். ஜூலைவரை எங்களுக்கு நேரம் அளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.அவர் சொன்னது போல காரைக்குடியில் ஒரு மிகப்பெரிய வீட்டை எடுத்து அதற்குள் பெரும்பகுதிப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அவ்வீடு தவிர சுற்றுப்புறங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்படுமாம்.

படத்தின் கதைக்களம் ஒரு நடுத்தரமான நகரம் என்பதால் அதற்கு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் சரியாக இருக்கும் என்பதால் அங்கே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பாண்டிராஜ் இயக்கிய அனைத்து படங்களின் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் படமாக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்குவதற்கு முன்பு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துவிட்டால் அரசு அனுமதி வழங்கிய மறுநாளே படப்பிடிப்பை தொடங்கிவிட படக்குழு தயாராகி வருகிறது என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

சனி 12 ஜுன் 2021